தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரஃபுல் பட்டேல் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு சமூக வலைதளத்தின் மூலம் சவ்ரப் பிம்பல்கர் மிரட்டல் விடுத்து இருந்தார். தனது மிரட்டலில் நரேந்திர தபோல்கரைப் போன்ற பின் விளைவுகளை சரத் பவாரும் எதிர்கொள்வார்'' என்று தெரிவித்து இருந்தார். மேலும், சமூக வலைதளத்தில் தன்னை பாஜக பிரமுகர் என்று அறிமுகம் செய்து இருந்தார்.
மேலும், சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலேவுக்கும் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் வந்து இருந்தது. அவரது தந்தைக்கு ஆபத்து இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தனது தந்தைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரியா கோரிக்கை வைத்து இருந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் இதைக் கண்டித்து, பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
undefined
வடமாநிலங்களில் தமிழக லாரிகளை குறிவைத்து அதிகாரி போர்வையில் கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்
இந்த நிலையில் இன்று மகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி இருக்கிறார் சரத் பவார். தலைமை இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும் மருமகன் அஜித் பவாருக்கு எந்தப் பொறுப்பும் சரத் பவார் வழங்கவில்லை. கூடுதலாக ஃபடேலுக்கும் சுப்ரியாவுக்கு இணையான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவருக்கு அடுத்த பொறுப்புதான் செயல் தலைவர். இது சுப்ரியாவுக்கு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் அடுத்தது தலைமைக்கு யார் வருவார்கள் என்பதை சரத் பவார் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
செருப்பு பிஞ்சிடும்... நடுரோட்டில் சில்மிஷம் செய்தவரை செருப்பைக் கழற்றி அடித்த மாணவி
கடந்த 1999ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் துவக்கினார். கட்சி துவங்கிய 25வது ஆண்டில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். அஜித் பவார் அருகே அமர்ந்திருக்க இந்த அறிவிப்பை சரத் பவார் வெளியிட்டார். கடந்த மாதம் தனது தலைவர் பதவியை சரத் பவார் ராஜினாமா செய்து இருந்தார். ஆனால், கட்சித் தொண்டர்கள் இவரது முடிவுக்கு எதிராக போராட்டம் செய்ததால், தனது முடிவை வாபஸ் பெற்றார்.
அப்போது பேசியிருந்த சரத் பவார், ''உங்களது உணர்வுகளை என்னால் ஒதுக்கி விட முடியாது. உங்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் எனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். இன்னும் கல்வி, விவசாயம், கூட்டுறவு, விளையாட்டு, பண்பாடு ஆகியவற்றில் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.