செருப்பு பிஞ்சிடும்... நடுரோட்டில் சில்மிஷம் செய்தவரை செருப்பைக் கழற்றி அடித்த மாணவி

Published : Jun 10, 2023, 12:29 PM ISTUpdated : Jun 10, 2023, 12:35 PM IST
செருப்பு பிஞ்சிடும்... நடுரோட்டில் சில்மிஷம் செய்தவரை செருப்பைக் கழற்றி அடித்த மாணவி

சுருக்கம்

கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட வாலிபரை ஊர்மக்கள் பிடித்து வைத்து அந்த மாணவியின் கையாலேயே நெருப்பை கழற்றி அடிக்க வைத்து, பின் காவல்துறையில் ஒப்படைத்தனர்.

கர்நாடகாவில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி ஒருவரை பொது இடத்தில் முகத்தில் செருப்பால் அறைந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அந்த வீடியோவில், மாணவி ஊர்மக்கள் முன்னிலையில் அந்த நபரை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுரா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை தனது விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை அந்த நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த நபர் மாணவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி தலைவரே... பிரதமரிடம் கேள்வி கேட்ட கார்கேவுக்கு கர்நாடக பாஜக எம்.பி.க்கள் பதிலடி!

அப்போது அந்த மாணவி கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனடியாக அப்பகுதி மக்கள் மாணவிடம் சில்மிஷம் செய்த நபரை மடக்கிப் பிடித்து தாக்கினர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவியும் தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அந்த நபரின் முகத்தில் அறைந்து விளாசினார்.

அடி வாங்கிய அந்த நபர் தன்னை விடுவிக்குமாறு சுற்றி இருந்த ஊர்மக்களிடம் கெஞ்சுவதையும் வீடியோவில் காணமுடிகிறது. தடுக்க முயற்சிக்காமல் மாணவியிடம் செருப்படி வாங்கிக்கொண்டார். இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஊர்மக்கள் யாரும் அடி வாங்கிய நபரின் உதவிக்கு வரவில்லை.

யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்? சிங்கப்பூர் அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் தமிழர்!

நன்றாக அடி கொடுத்த பின் அந்த நபரை ஊர்மக்கள் போலீசார் வசம் ஒப்படைத்துவிட்டனர். பட்டப் பகலில் கல்லூரி செல்லும் மாணவியிடம் இளைஞர் அத்துமீறி தவறாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈபிஎஸ் கோட்டையில் மூன்று நாள் பயணம்! இன்று சேலம் செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!