ஒடிசா ரயில் விபத்து பற்றி காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் கர்நாடக பாஜக எம்.பி.க்கள் நால்வர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
ஒடிசா நடந்த ரயில் விபத்து பற்றி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்திற்காக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா உட்பட நான்கு பாஜக எம்.பி.க்கள் பதில் கடிதம் எழுதியுள்ளனர். கார்கே, தனது கடிதத்தில் 10 கேள்விகளை எழுப்பி, 288 பேர் பலியான பாலசோர் ரயில் விபத்துக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளியிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.
ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படுவது பற்றி கார்கே கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறிய எம்பிக்கள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சிஆர்எஸ்) விபத்து குறித்து உன்னிப்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், சிபிஐ விசாரணை விபத்தின் பெரிய தாக்கங்களையும் விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ரயிலை தவறவிட்டாலோ, டிக்கெட்டை ரத்து செய்தாலோ, முழு பணத்தை திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா?
எம்.பி.க்கள் தங்கள் கூட்டுக் கடிதத்தில் கார்கேவுக்கு சில புள்ளிவிவரங்களையும் சுட்டிக்காட்டியள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில், ரயில்வே 4.6 லட்சம் பேரை பணியில் சேர்த்துள்ளதாகவும் தற்போது சுமார் 1.5 லட்சம் பேரை நியமிக்கும் செயல்முறை நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர். “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 4.1 லட்சம் பேர்தான் நியமிக்கப்பட்டனர். நாங்கள் 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்வதற்குள் நாங்கள் 6.1 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை ரயில்வே பணியில் நியமிப்போம். இது கிட்டத்தட்ட 50% அதிகமாகும்" என்று அவர்கள் கூறியுள்ளார்.
புதிய லோகோ பைலட்டுகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், ஏற்கெனவே இருக்கும் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது என்ற கார்கேயின் குற்றச்சாட்டை நிராகரித்த பாஜக எம்பிக்கள், 5,518 உதவி லோகோ பைலட்டுகளை சமீபத்தில் நியமித்ததாக கூறினர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதிக் ஜோஷி யார்?
பிப்ரவரி 2023 இல் மைசூருவில் இரண்டு ரயில்கள் இடையே மோதலுக்கு பிறகு ரயில்வே மூத்த அதிகாரி கூறிய எச்சரிக்கையை ரயில்வே புறக்கணித்தது குறித்து கார்கே எழுதிய கேள்விக்கு பதிலளித்துள்ள எம்.பி.க்கள், அப்படி எந்த விபத்தும் நடக்கவே இல்லை என்று நிராகரிக்கின்றனர். மேலும், “வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில் பார்த்த உண்மைகளின் அடிப்படையில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவது உங்கள் அந்தஸ்தில் உள்ள தலைவருக்குப் பொருந்தாது. ஆனால் ஒருவேளை வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ற முறையில் நீங்கள் பொய்ச் செய்திகளை உண்மையாக மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்” என்றும் தெரிவித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் (சிஆர்எஸ்) பரிந்துரைகளை ரயில்வே வாரியம் புறக்கணித்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் எம்.பி.க்கள், கடந்த 5 ஆண்டுகளில் சிஆர்எஸ் பரிந்துரைகளில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை ரயில்வே ஏற்றுக்கொண்டிருக்கிறது என போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் பாராட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ட்விட்டரில் டிக் வாங்கிய பயனர்களுக்கு மட்டும்... எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு