ஒரு சில காரணங்களால் நீங்கள் பயணத்தை ரத்து செய்தாலோ அல்லது ரயிலை தவறவிட்டாலோ பணத்தை திரும்ப பெற முடியும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் சுமார் 64,000 கி.மீ ரயில் பாதையில் ஒவ்வொரு நாளும் சுமார் 22 மில்லியன் பேர் 14,000 ரயில்களில் பயணிக்கின்றனர். டிக்கெட் விலை குறைவு, விரைவான பயணம், வசதியான பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.
பலரும் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதால், டிக்கெட்களை முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கின்றனர். எனினும் ஒரு சில காரணங்களால் நீங்கள் பயணத்தை ரத்து செய்தாலோ அல்லது ரயிலை தவறவிட்டாலோ பணத்தை திரும்ப பெற முடியும்.
ஆம். பயணிகள் ரயிலைத் தவறவிட்டாலோ அல்லது பயணிகளின் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை ரத்து செய்தாலோ முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய நபர்கள் ஐஆர்சிடிசி போர்ட்டலில் ஆன்லைனில் டிக்கெட் டெபாசிட் ரசீதை (டிடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும்.
அந்தந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் செலுத்திய வாடிக்கையாளரின் வங்கியில் பணத்தைத் திரும்பப் பெறுதல் செயலாக்கப்படும். டிக்கெட்டுகள் 5 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தப்படும். கவுண்டரில் டிக்கெட் பெற்றவர்களும் ஆன்லைனில் டிடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். செயல்முறை முடிந்ததும், வாடிக்கையாளர்கள் முன்பதிவு கவுண்டரில் இருந்து சேகரிக்கலாம். எனினும் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணம் திரும் கிடைக்காது..
TDR ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி?
ஐஆர்சிடிசி டிக்கெட்டை ரத்துசெய்தால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான படிகள்:
ரயில் முன்பதிவு அலுவலகத்தில் டிக்கெட் வாங்கியவர்கள், முன்பதிவு அலுவலகத்தில் TDR விண்ணப்பத்தை வாங்கி, பூர்த்தி செய்து, ஐஆர்சிடிசி தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். நீங்கள் முன்பதிவு செய்த ரயில் கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள் இந்த விண்ணப்பத்தை அனுப்பினால், குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்கள் டிக்கெட் தொகை திருப்பி அனுப்பப்படும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதிக் ஜோஷி யார்?