ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி அவரின் குடும்பத்தினருக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் உச்ச பட்ச இசட் பிளஸ்(Z-plus) பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி அவரின் குடும்பத்தினருக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் உச்ச பட்ச இசட் பிளஸ்(Z-plus) பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த பிகாஷ் சாஹா என்பவர் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்திரிருந்தார். அதில் எந்த அடிப்படையில் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி, குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று கேட்டிருந்தார்.
இந்தவழக்கில் உத்தரவிட்ட திரிபுரா உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 21ல் பிறப்பித்த உத்தரவில், அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், “ முகேஷ்அம்பானி அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதற்காகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கான செலவை அவரே ஏற்றுக்கொள்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐநாவில் நித்தியானந்தாவுக்கு நீதி கேட்ட கைலாசா நாடு.. இது என்னப்பா புது ட்விஸ்ட்டா இருக்கு.!!
இதையடுத்து, நீதிபதிகள், கிருஷ்ணா முராரி, அசானுதீன் அமானுல்லா பிறப்பித்த உத்தரவில், “ முகேஷ் அம்பானி, அவரின் மனைவி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால், அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை குறிப்பிட்ட இடத்தோடு, பகுதியோடு சுருக்கிவிடக்கூடாது.
உச்சபட்ச இசட்பிளஸ் பாதுகாப்பு அம்பானி குடும்பத்தினருக்குஇந்தியா முழுவதும் வழங்கிட வேண்டும், இதே மகாராஷ்டிரா அரசும், உள்துறை அமைச்சகமும் உறுதி செய்ய வேண்டும்.
அரசின் கொள்கை முடிவின்படி, உச்சபட்ச இசட்பிளஸ் பாதுகாப்பை அரசு முடிவு செய்யலாம். அதேபோல, அம்பானி குடும்பத்தினர் வெளிநாடு செல்லும்போதும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.
அம்பானி மற்றும் அவரின் மனைவி குடும்பத்தினர் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்த செலவையும் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாட்டுக்கு உள்ளேயும் ஆகும் செலவையும் அவர்களே ஏற்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்