கனெக்‌ஷன்ஸ் 2023 முன்னாள் மாணவர்கள் மீட்டில் IFFCO IIMCAA விருதுகள் அறிவிப்பு

Published : Feb 28, 2023, 07:34 PM IST
கனெக்‌ஷன்ஸ் 2023 முன்னாள் மாணவர்கள் மீட்டில் IFFCO IIMCAA விருதுகள் அறிவிப்பு

சுருக்கம்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பி 7வது IFFCO IIMCAA விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.  

இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஐஐஎம்சி)கல்வி நிறுவனத்தின் 11வது வருடாந்திர முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கடந்த 26ம் தேதி டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்வின்போது 7வது IFFCO IIMCAA விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஐஐஎம்சி தலைமை இயக்குநர் பேராசரியர் சஞ்சய் திவிவேதி விருதுகள் மற்றும் காசோலைகளை வெற்றியாளர்களுக்கு வழங்கினார்.

புகழ்பெற்ற உருது கவிஞர்களான வாசிம் பரெல்வி, அகீல் நோமானி மற்றும் ராணா யஷ்வந்த் ஆகியோரின் முஷைரா & கவி சம்மேளனத்துடன் நிகழ்வு தொடங்கியது. 2வது செசனில், பொன்விழா குழு (1972-73) மற்றும் வெள்ளி விழா குழு (1997-98) முன்னாள் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

IFFCO IIMCAA விருது வென்றவர்கள் 3வது செசனில் பாராட்டப்பட்டனர். ஒடிசா இலக்கியவாதி டாக்டர். காயத்ரிபாலா பாண்டா சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. சுஷில் சிங், அமித் கடோக், Pee Lee Ete, பங்கஜ் சந்திர கோஸ்வாமி ஆகியோருக்கு பொதுச்சேவை விருது வழங்கப்பட்டது. 

ஆண்டின் சிறந்த பத்திரிகையாளருக்கான விருதும், ரூ.1.5 லட்சம் பரிசுத்தொகையும் பீகாரை சேர்ந்த உட்கர்ஷ் சிங்கிற்கு வழங்கப்பட்டது. வேளாண்மை ரிப்போர்ட்டருக்கான விருதும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் டெல்லியை சேர்ந்த ரோஹித் விஷ்வகர்மாவிற்கும் வழங்கப்பட்டது. 

டெல்லியை சேர்ந்த ஆண்ட்ரூ அம்சானுக்கு ஆண்டின் சிறந்த ரிப்போர்ட்டருக்கான விருதும் ரூ.50,000 பரிசுத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பிராந்திய மொழி ரிப்போர்ட்டருக்கான விருது கேரள பத்திரிகையாளர்களான பிஜின் சாமுவேல் (அச்சு ஊடகம்) மற்றும் சந்தியா மணிகண்டன் (பிராட்கேஸ்டிங்) ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த பிஆர் விருது கர்நாடகாவை சேர்ந்த ஏஆர் ஹேமந்த்துக்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த விளம்பர நபருக்கான விருது டெல்லியை சேர்ந்த மோஹித் பாஸ்ரிச்சாவுக்கு வழங்கப்பட்டது. ஜூரி சிறப்பு விருதுகள், ஹர்ஷிதா ரத்தோர், ஜோதி யாதவ், ஹரிகிஷான் ஷர்மா, என்.சுந்தரேஷா சுப்ரமணியன், ஷம்பு நாத், ராஜ்ஸ்ரீ சாஹூ, அபிஷேக் யாதவ், ஜோதிஸ்மிதா நாயக், சுரபி சிங், ஷுபம் திவாரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

IIMCAA தலைவர் கல்யாண் ரஞ்சன் இந்த நிகழ்விற்கு தலைமை வகித்தார். ராஜேந்திர கட்டாரியா, சுனில் மேனன், சிம்ரத் குலட்டி, நிதின் பிரதான், காயத்ரி ஸ்ரீவஸ்தவா, நிதின் மண்ட்ரி, ஓம் பிரகாஷ், யஷ்வந்த் தேஷ்முக் மற்றும் பலர் ஏற்புரை வழங்கினர். 

IFFCO IIMCAA 2023 விருது வென்றவர்களின் முழு பட்டியல்:

வாழ்நாள் சாதனையாளர் விருது - பேராசிரியர்  கீதா பாம்ஸாய் 
வாழ்நாள் சாதனையாளர் விருது - அனிதா கௌல் பாசு
வாழ்நாள் சாதனையாளர் விருது  - பிரகாஷ் பத்ரா
வாழ்நாள் சாதனையாளர் விருது - சமுத்ரா குப்தா காஷ்யப்
வாழ்நாள் சாதனையாளர் விருது - அனுராக் வாஜ்பேயி

சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது - டாக்டர். காயத்ரிபாலா பாண்டா
பொதுச்சேவை - சுஷில் சிங்
பொதுச்சேவை - அமித் கடோச்
பொதுச்சேவை - Ete Pee Lee
பொதுச்சேவை - பங்கஜ் சந்திரா கோஸ்வாமி

ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது - உட்கர்ஷ் சிங்
வேளாண்மை ரிப்போர்ட்டருக்கான விருது - ரோஹித் விஷ்வகர்மா
அச்சு ஊடகத்தின் சிறந்த ரிப்போர்ட்டர் - ஆண்ட்ரூ அம்ஸான்
பிராந்திய மொழியில் சிறந்த அச்சு ஊடக ரிப்போர்ட்டர் - பிஜின் சாமுவேல் (கேரளா)
பிராந்திய மொழியில் சிறந்த செய்தி தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் - சந்தியா மணிகண்டன்
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் - நிபிர் தேகா 
ஆண்டின் சிறந்த ப்ரொடியூஸர் - ஜோதி ஜங்ரா
பிஆர் விருது - ஏஆர் ஹேமந்த்
விளம்பர நபர் விருது - மோஹித் பாஸ்ரிச்சா

ஜூரி சிறப்பு விருதுகள்

ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் - ஹர்ஷிதா ரத்தோர்
ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் - ஜோதி யாதவ்
ஆண்டின் சிறந்த வேளாண்மை ரிப்போர்ட்டர் (அச்சு ஊடகம்) - ஹரிகிஷன் ஷர்மா
ஆண்டின் சிறந்த ரிப்போர்ட்டர் (அச்சு ஊடகம்) - என்.சுந்தரேஷ சுப்ரமணியன்
ஆண்டின் சிறந்த ரிப்போர்ட்டர்(தொலைக்காட்சி) - ஷம்பு நாத்
சிறந்த பிராந்திய மொழி ரிப்போர்ட்டர் (அச்சு) - ராஜ்ஸ்ரீ சாஹூ
ஆண்டின் சிறந்த ரிப்போர்ட்டர் (தொலைக்காட்சி) - அபிஷேக் யாதவ்
சிறந்த பிராந்திய மொழி ரிப்போர்ட்டர் - ஜோதிஸ்மிதா நாயக்
ஆண்டின் சிறந்த ப்ரொடியூசர் - சுர்பி சிங்
சிறந்த ப்ரொடியூசர் - ஷுபம் திவாரி 
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!