மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் அங்குள்ள ஆளுநருக்கு அரசுக்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசின் முடிவை ஆளுநர் ஏற்க மறுப்பதும் ஆளுநரின் செயலுக்கு அரசு கண்டனம் தெரிவிப்பதும் தொடர்ந்து வருகிறது. அதேநிலை தமிழகத்திலும் நிலவுகிறது. இந்த நிலையில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டமன்றத்தை கூட்ட அம்மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் மறுப்புதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: சீனியர் மாணவரின் ராகிங் தொல்லையால் மருத்துவ மாணவி மயக்க ஊசி போட்டு தற்கொலை
அப்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஆளுநர் கேட்ட விவரங்களை பஞ்சாப் முதல்வர் தர மறுப்பதாக வாதாடினார். பின்னர் அமைச்சரவை முடிவுப்படி சட்டப்பேரவையை கூட்ட வேண்டியது ஆளுநரின் கடமை என தெரிவித்த நீதிபதிகள், ஆளுநர் கேட்கும் விவரங்களை தர வேண்டியதும் முதலமைச்சரின் கடமை என்றும் அறிவுறுத்தினர். மேலும் அரசியல் சட்டரீதியான பதவியில் இருக்கும் பண்பட்ட தலைவர்களால் இக்கட்டான சூழ்ல்நிலைகள் ஏற்படாது என நம்புவதாகவும், ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும், அவற்றை பண்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!
அரசியலமைப்பு ரீதியான பதவியில் உள்ள முதல்வர், கடமையை செய்யவில்லை என்று கூறி ஆளுநர் கடமையை தட்டிக் கழிக்க முடியாது என்றும், இருப்பினும் முதலமைச்சர் விவரங்களை தரவில்லை என்பதை காரணம் காட்டி அமைச்சரவை முடிவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.