சாக்கு போக்கு சொல்லாதீங்க அரவிந்த் கெஜ்ரிவால்; ஆம் ஆத்மி மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்!!

By Dhanalakshmi G  |  First Published Jun 22, 2023, 5:26 PM IST

பீகாரில் நாளை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்து இருந்தார்.


பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் நடக்கிறது. இந்தக்  கூட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்து இருந்தார். 2024ஆம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இணைவது குறித்து கலந்தாலோசிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அழைப்பு விடப்படவில்லை. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது. 

Latest Videos

undefined

இந்த நிலையில் இந்த சட்டம் மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வரும்போது தடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். சென்னைக்கு வந்திருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து இருந்தார். இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க அரவிந்த கெஜ்ரிவால் வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் இருவருமே வாய்ப்பு வழங்கவில்லை.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்: டைம் கேட்ட ஸ்டாலின், கார்கே; கலந்து கொள்ளும் சரத் பவார்!

இந்த நிலையில் அவசர சட்டத்தை எதிர்க்கும் தங்களது முயற்சியை ஆதரிக்கவில்லை என்றால் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் மிரட்டல் விடுத்து இருக்கிறார். 

''டெல்லி அவசர சட்டம் தொடர்பாக எங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்போம்'' என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. மேலும், நாளை நடக்கும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் முடிவை கேட்கும். அப்போது காங்கிரஸ் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டியது இருக்கும்'' என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் கூடும் எதிர்க்கட்சிகள்; களம் மாறிய தேவகவுடா; பலிக்குமா திட்டம்?

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் பதிலடி கொடுத்து இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியின் தீவிர எதிர்ப்பாளர்களில் ஒருவரான சந்தீப் தீட்சித், "கெஜ்ரிவால் ஜி உங்களை யாரும் மிஸ் பண்ண மாட்டார்கள். நீங்கள் கூட்டத்தை தவிர்க்க சாக்குபோக்குகளை தேடுகிறீர்கள். இந்தக் கூட்டம் ''டீல்'' மேற்கொள்ளும் மக்களுக்கானது அல்ல'' என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, டெல்லியில் அதிகார மையத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்து இருந்தது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே அதிகாரிகளை மாற்றும், நியமிக்கும் அதிகாரம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடுத்தது. அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மோதல் முற்றி வருகிறது. 

click me!