இந்தியாவில் எந்தவொரு தினம், பிறந்தநாள், நினைவுநாள், கொண்டாட்டம் என எந்த நிகழ்ச்சி வந்தாலும் தனக்கே உரிய பாணியில் மணல் சிற்பத்தை வடிப்பதில் வல்லவர் சுதர்சன் பட்நாயக்.
புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பான மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
உலக அளவில் பிரபலமான மணல் கலையை உருவாக்கி செய்திகளில் அதிகளவில் இடம்பிடித்தவர் சுதர்சன் பட்நாயக். இந்தியாவின் மிகச் சிறந்த மணல் சிற்ப கலைஞர் ஆவார். ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பிறந்த சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையை சுதர்சன் பட்நாயக் கடற்கரை என்று சொல்லும் அளவுக்கு மாற்றி விட்டார் என்று சொன்னால் அது மிகையல்ல.
இதையும் படிங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது உதயநிதி ஸ்டாலினுக்கும் நடக்கும் ; அண்ணாமலை சொன்ன பிளாஷ்பேக் !!
நாட்டில் எந்தவொரு விசேஷ நாட்களிலும், சோக நாட்களிலும் சுதர்சன் பட்நாயக் கைவண்ணம் மிளிரும். விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் எந்தவொரு தினம், பிறந்தநாள், நினைவுநாள், கொண்டாட்டம் என எந்த நிகழ்ச்சி வந்தாலும் தனக்கே உரிய பாணியில் மணல் சிற்பத்தை வடிப்பதில் வல்லவர் சுதர்சன் பட்நாயக். மணல் சிற்பத்துக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்று இருக்கிறார் சுதர்சன் பட்நாயக்.
இதையும் படிங்க.. வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!
புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஒடிசாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை மணல் சிற்பமாக வடிவமைத்து, அதனை 1.5 டன் தக்காளிகளைக் கொண்டு அலங்கரித்துள்ளார். pic.twitter.com/HJo8oGFpI0
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இது தவிர மணல் சிற்பத்தில் கின்னஸ் சாதனை, லிம்கா சாதனை என பல்வேறு சாதனை, விருதுகளை தன்வசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஒடிசாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை மணல் சிற்பமாக வடிவமைத்து இருக்கிறார் சுதர்சன் பட்நாயக். அதனை 1.5 டன் தக்காளிகளைக் கொண்டு அலங்கரித்துள்ளார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க.. ஆப்ரேசன் 2024 கேம்! தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்.. முடிக்கும் ஜே.பி நட்டா - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!