முகேஷ் அம்பானி வீட்டுக்கு வந்த புது வாரிசுகள் ! ரூப்டாப் முதல் படுக்கை வரை அம்பானி வீட்டில் அதிரடி மாற்றங்கள்!

Published : Dec 24, 2022, 04:52 PM IST
முகேஷ் அம்பானி வீட்டுக்கு வந்த புது வாரிசுகள் ! ரூப்டாப் முதல் படுக்கை வரை அம்பானி வீட்டில் அதிரடி மாற்றங்கள்!

சுருக்கம்

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் இருவரும் பிறந்த இரட்டைக் குழந்தைகளுடன் மும்பை வந்தடைந்தனர். 

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, இன்று (டிசம்பர் 24) அன்று கணவர் ஆனந்த் பிரமல் மற்றும் அவர்களது பிறந்த இரட்டைக் குழந்தைகளுடன் மும்பைக்கு வந்தடைந்தார்கள். 

தம்பதியருக்கு நகரில் உள்ள அவர்களது இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி இன்று தனது கணவர் ஆனந்த் பிரமல் மற்றும் பிறந்த இரட்டையர்களுடன் மும்பை வந்தடைந்தார்.

இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்! 

இஷா மற்றும் ஆனந்த் கலினா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவர்களது பெற்றோர்களால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. நவம்பரில் இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு அம்பானி வாரிசு வீட்டுக்கு வருவது இதுவே முதல் முறை. இரு தரப்பு குடும்பங்களும் தம்பதிகளுக்கும் அவர்களது இரட்டைக் குழந்தைகளுக்கும் ஆடம்பரமான வரவேற்பு அளிக்கத் தயாராகினர். 

முகேஷ் அம்பானி தனது மகளையும் மருமகனையும் தாமாகவே சென்று வரவேற்க, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி மற்றும் அஜய் பிரமல் ஆகியோரும் உடன் சென்றனர். இதே வீடியோவை மும்பையைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடு பூக்கள் மற்றும் சிலைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இஷாவின் மாமியார் ஸ்வாதி பிரமல் தம்பதியர் மற்றும் அவர்களின் இரட்டையர்களுக்காக நுழைவாயிலில் காத்திருந்தார். பந்தனி - பிரிண்ட் துப்பட்டாவுடன் அழகான பிங்க் நிற லெஹங்கா அணிந்திருந்தார். குடும்பத்தை வரவேற்க நீதா அம்பானியும் வீட்டிற்கு வந்தார். குருமார்களும் அவர்களின் வருகைக்காகக் காத்திருப்பதை பார்க்கலாம்.

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலுக்கு நவம்பர் 19 அன்று கிருஷ்ணா என்ற ஆண் குழந்தையும், ஆதியா என்ற பெண் குழந்தையும் பிறந்தன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செடார் செனாய் என்ற இடத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ‘இஷா மற்றும் குழந்தைகள், பெண் குழந்தை ஆதியா மற்றும் ஆண் குழந்தை கிருஷ்ணா நலமாக உள்ளனர். ஆதியா, கிருஷ்ணா, இஷா மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க..கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல் - அன்றே கணித்தார் கருணாநிதி!

இஷா மற்றும் ஆனந்தின் வீட்டில் குழந்தைகளுக்கு சிறப்பு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அம்பானியின் வீட்டிலும் சிறப்பு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளில் சுற்றும் படுக்கைகள், சுற்றும் ரூப்டாப் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையாக சூரிய ஒளி குழந்தைகளின் மீது விழுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இயற்கையாக சூரிய ஒளி கிடைப்பதால் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைத்து விடுகிறது. 

குழந்தைகளின் எலும்புகளுக்கு வலு கிடைக்கிறது. தினமும் உடலுக்கு 15 நிமிடங்கள் யுவி கதிர்கள் கிடைக்க வேண்டும். கருமை நிற தோல்கள் கொண்ட குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு சூரிய ஒளி தேவைப்படும். ஜீரணிக்க தேவையான செரோடினின் உடலில் சுரப்பதற்கு சூரிய ஒளி உதவுகிறது. இதனால், ஜீரண சக்தி கிடைப்பதுடன் குழந்தை நன்றாக தூங்கும்.

குழந்தைகளை ஆரம்பித்திலேயே சூரிய ஒளியில் வைப்பதால், எதிர்காலங்களில் இன்சுலின் சுரப்பில் குறைபாடுகள் இருக்காது. சர்க்கரை வியாதி வருவது தடுக்கப்படும். காமாலையில் இருந்தும் பாதுகாக்கப்படும். பிறகும்போதே சில குழந்தைகளுக்கு பிலிருபின் குறைபாடு இருக்கும். இதனால், தோல் நிறம் மஞ்சளாக மாறும். இந்தப் பிரச்சனையும் சூரிய ஒளியில் குழந்தையை காட்டுவதால் சரி செய்யப்படும் என்றும் கூறுகின்றனர். இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோர் டிசம்பர் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.. வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!