சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும் கருவிகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றின் இருப்பை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சரிபார்த்து வைக்க வேண்டும். எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும் கருவிகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றின் இருப்பை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சரிபார்த்து வைக்க வேண்டும். எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 10 லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
சீனா உள்பட 4 நாடு பயணிகளுக்கு RTPCR கொரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு அதிரடி
இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த தடுப்பு நடவடிக்கைகளில் மத்தியஅரசு தீவிரமாக இறங்கியுள்ளது. வெளிநாட்டு பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. சீனா, ஜப்பான, தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா அறிவித்தார்.
இந்நிலையில் எந்த சவாலான சூழலையும் எதிர்கொள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் மனோகர் அகானி, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான திருத்தப்பட்ட OROP ஓய்வூதியத் திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும்?
நமது நாட்டில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கிறது, இருந்தாலும், எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வகையில், மருத்துவக் கட்டமைப்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆக்சிஜன் இருப்பு வைத்திருப்பது முக்கியமானது, குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்க மருத்துவ ஆக்சிஜன் முக்கியம்.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட்களை தயாராக வைத்திருக்க வேண்டும், அவ்வப்போதுஅதை இயக்கி பரிசோதனை செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
மருத்துவ ஆக்சிஜன் தயாராகவும் போதுமான இருப்பு வைத்திருக்க வேண்டும், தடையின்றி கிடைக்கவும் உறுதி செய்ய வேண்டும். போதுமான அளவு மருத்துவ சிலிண்டர்களை வைத்திருந்து அவற்றை அவ்வப்போது நிரப்ப வேண்டும்.
ஆர்எஸ்எஸ்,பாஜக வெறுப்பை பரப்புகின்றன:ராகுல் காந்தி தாக்கு!டெல்லி வந்த பாரத் ஜோடோ யாத்திரை
நோயாளிகள் உயிர்காக்கும் கருவிகளான வென்டிலேட்டர்கள், பிபாப், எஸ்பிஓ2 சிஸ்டம்ஸ் உள்ளிட்ட கருவிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை தயார் செய்யப்பட்டு, சவாலான நேரங்களில் தடையின்றி செயல்பட வைக்க வேண்டும்.
தினசரி ஆக்சிஜன் தேவை மற்றும் நுகர்வுக்காக ODAS தளத்திற்கு ஆக்சிஜனைப் பயன்படுத்தும் அனைத்து சுகாதார வசதிகளையும் பின்பற்ற வேண்டும். பெருந்தொற்றுகாலத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு பிஎஸ்ஏ பிளான்ட் உருவாக்கவும், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் அமைக்கவும், ஆக்சிஜன் தொடர்பான சவால்களைக் களையவும் ஆதரவுஅளித்தது. விலை குறைவாக ஆக்சிஜனை எவ்வாறு உற்பத்தி செய்வது எனவும் தெரிவிக்கப்பட்டது
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது