Covid Cases in India:PCR Test:சீனா உள்பட 4 நாடு பயணிகளுக்கு RTPCR கொரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு அதிரடி

Published : Dec 24, 2022, 01:05 PM ISTUpdated : Dec 24, 2022, 01:09 PM IST
Covid Cases in India:PCR Test:சீனா உள்பட 4 நாடு பயணிகளுக்கு RTPCR கொரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு அதிரடி

சுருக்கம்

சீனா உள்ளிட்ட 4 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட 4 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக மனிதர்களை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் அடங்கி இருந்தநிலையில் மீண்டும் எழுந்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதிலும் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்படுவோர்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா, பிரியங்கா காந்தி இணைந்தனர்

ண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
சீன மக்கள் தொகையில் ஏறக்குறைய 18 சதவீதம் பேருக்கு கடந்த 20 நாட்களில் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து, சர்வதேச பயணிகள் இந்தியா வரும்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்து. அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் கூட்டமான இடங்கள், மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் இடங்களுககுச் செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா, மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, நடப்பில் உள்ள கொரோனா பரவல் சூழல் குறித்தும், சூழல்களை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தியாவில் பரவும் கொரோனா.. மக்கள் பீதி அடைய தேவையில்லை !! - அப்பல்லோ மருத்துவமனை அறிவுறுத்தல்!

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாண்டவியா பேசுகையில் “ யாரும் பதற்றம் அடைய வேண்டாம். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் நமக்கு 3ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, மாநிலங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்கும். தேவைப்படும் நேரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சீனாவில் கொரோனா பரவலையும், சர்வதேச அளவிலான சூழலையும் தினசரி உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது, ஆனால் எத்தனைபேர் தினசரி பாதிக்கப்படுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆதலால், சர்வதேச பயணிகளுக்கு கட்டுப்பாடு வரும்” எனத் தெரிவித்தார்.  

இதில் வெளிநாடுகளில் இருந்து வரும்  பயணிகள் அனைவரும் ஏர்-சுவிதா படிவங்களை நிரப்பி, தங்களின் உடல்நிலை குறித்த விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வர விரும்பும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் ஏர்-சுவிதா படிவத்தை டிஜிட்டல் வடிவத்தில் ஆன்லைன் மூலமே நிரப்ப முடியும்.

Bharat Biotechக்கின் ஊசியில்லா, மூக்குவழி கொரோனா தடுப்பூசி இன்று அறிமுகம்: யார் பயன்படுத்தலாம்?

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள்அனைவருக்கும் கட்டாயமாக ஆர்டி பிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். எந்த பயணிக்காவது கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். சர்வதேச பயணிகள் இந்தியா வரும் முன் ஏர்சுவிதா படிவத்தில் தங்களின் உடல்நிலை குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!