குழந்தைகளுக்கு வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு இன்றுமுதல் விடுமுறை அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Sep 17, 2022, 10:44 AM IST
Highlights

குழந்தைகளுக்கு வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 25 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் கிடையாது. 
 

குழந்தைகளுக்கு வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 25 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் கிடையாது. 

கடந்த 10 நாட்களாக 50 % குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்தால் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:தந்தை பெரியாரின் 144 -வது பிறந்த நாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

இதனால் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஏற்கனவே பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை மூட அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. 

இதனையடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் 26ம் தேதியன்று தொடங்கவுள்ளது. இதனால் 1 முதல் 8 ஆம் வரை 25-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:Watch : காகிதப்பூ யார்? ஆலமரம் யார்? நெல்லை அதிமுக காட்டம்!!

click me!