எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை.. மோடிக்கு மாற்றே இல்லை.. பிரதமருக்கு மாஸா வாழ்த்து சொன்ன அண்ணாமலை.

By Ezhilarasan Babu  |  First Published Sep 17, 2022, 9:37 AM IST

மக்கள் நலனை மேம்படுத்தவும் தீவிரமாகப் பாடுபடுவதால் நரேந்திர மோடி அவர்கள் மாற்றில்லா மாணிக்கமாக மதிப்பிற்குரிய `மக்களின் தலைவராக’ ஒளி வீசுகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது பிறந்த தாளில் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடியில் 74வது பிறந்த நாளான இன்று அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:- 


மக்கள் நலனை மேம்படுத்தவும் தீவிரமாகப் பாடுபடுவதால் நரேந்திர மோடி அவர்கள் மாற்றில்லா மாணிக்கமாக மதிப்பிற்குரிய `மக்களின் தலைவராக’ ஒளி வீசுகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது பிறந்த தாளில் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடியில் 74வது பிறந்த நாளான இன்று அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:- 

நாட்டையும் நாட்டின் மக்களையும் குறித்து மட்டுமே சிந்திக்கும் ஒரு மாமனிதரை, மனிதருள் புனிதரை நாம் பெற்றிருப்பது பெரும் பேறு. பாரதப் பிரத்மர் மோடி அவர்களின் பிறந்த நாளில் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் உள்ளன்போடு விரும்பப்படும் ஒரு அற்புத மனிதராக திகழ்பவர் மாண்புமிகு நம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: நாம் மானம் கெட்டவர்கள், இந்துக்களை இழிவா பேசிய ஆ.ராசா ரோட்ல நடக்கிறார், பாஜகவை தூக்கி சாப்பிட்ட கடம்பூர் ராஜூ

தன்னலம் கருதாமல் பொது நலம் கருதி, நாட்டை உறுதியாக கட்டமைக்கும் தொலைநோக்கு பார்வையுடன், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம் தராமல், மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் இவரின் வேகமான செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. பாரதப்பிரதமர் திரு. மோடி அவர்களின் வெளிநாட்டுக் கொள்கை முயற்சிகள், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் உண்மையான திறமை மற்றும் பங்களிப்பை உலகறியச் செய்தன.

இதையும் படியுங்கள்: #TNbreakfast: கோவில் நிதி மூலம் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஐடியா கொடுக்கும் கி.வீரமணி..!

பாரதிதாசனாரின் கனவினில் விரிந்த.... தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனில் அன்றோ இன்பம் தங்கும்... என்ற பாவேந்தரின் வரிகளுக்கு கண் திறப்பு செய்ய, வாராது வந்த மாமணியாய் பரந்த மனமும் விரிந்த பண்பும் கொண்ட, மாமனிதர் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமாக அறிந்து கொண்டும், அதனை தீர்க்கும் வழி முறைகளைத் தெளிவாகத் திட்டமிட்டும், மக்கள் நலனை மேம்படுத்தவும் தீவிரமாகப் பாடுபடுவதால் நரேந்திர மோடி அவர்கள் மாற்றில்லா மாணிக்கமாக மதிப்பிற்குரிய `மக்களின் தலைவராக’ ஒளி வீசுகிறார் நம் பாரதப் பிரதமருக்குத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

click me!