நாட்டில் 2014 ஆம் ஆண்டு புவியியல் பரப்பில் 4.90% ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதி, தற்போது 5.03% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், 2014ஆம் ஆண்டில், 1,61,081.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதி, தற்போது 1,71,921 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 16,000 சதுர கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. காடுகளின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இதேபோன்று சமுதாய வனப்பகுதியும் 2014ஆம் ஆண்டில் வெறும் 43 ஆக மட்டுமே இருந்தது. இது 2019ஆம் ஆண்டில் 100க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
18 மாநிலங்களில் தோராயமாக 75,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட 52 புலிகள் காப்பகங்களை இந்தியா கொண்டுள்ளது. உலக அளவில் சுமார் 75% காட்டுப் புலிகளை இந்தியா கொண்டுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2018 ஆம் ஆண்டிலேயே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக இந்தியா அதிகரித்து, இலக்கை எட்டியது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 2,226-ல் இருந்து 2018ஆம் ஆண்டில் 2,967 ஆக அதிகரித்துள்ளது.
புலிகள் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2014 ஆம் ஆண்டில் ரூ.185 கோடியிலிருந்து 2022 ஆம் ஆண்டில் ரூ.300 கோடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது.
எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை.. மோடிக்கு மாற்றே இல்லை.. பிரதமருக்கு மாஸா வாழ்த்து சொன்ன அண்ணாமலை.
ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 523-ல் இருந்து 28.87 சதவிகித (இதுவரை அதிக வளர்ச்சி விகிதங்களில் ஒன்று) அதிகரிப்பு விகிதத்துடன், இந்தியாவின் 674 என்ற தனிநபர் மக்கள்தொகையுடன் பார்க்கும்போது நிலையான அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 7910 என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருந்தது. இது 60 சதவிகித வளர்ச்சியாகும்.
PM Modi : பிரதமர் மோடி பிறந்தநாள் ; ஆழ்கடலினுள் இருந்து வாழ்த்து தெரிவித்த ஸ்கூபா டைவர்கள்!
உலகில் இருந்தே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட நமீபியா நாட்டின் சீட்டா வகைகள் இன்று மத்தியப்பிரதேசம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றில் மூன்று ஆண் சீட்டாக்கள், ஐந்து பெண் சீட்டாக்கள். குவாலியர் வந்து சேர்ந்த இந்த சீட்டாக்கள் அங்கிருந்து குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பூங்காவில் பிரதமர் மோடியால் விடப்படுகிறது. இந்த சீட்டாக்களை இந்தியா கொண்டு வருவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.