
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு மாத கடின உழைப்பிற்குப் பிறகு, சுமார் 400 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சிறப்பு பிறந்தநாள் பரிசைத் தயாரித்துள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக்காட்டும் குறிப்புகள், வாழ்த்துக்கள் மற்றும் படங்கள் அடங்கிய 1.25 கிமீ நீளமான கடிதத்தை பிரதமருக்கான பரிசாக உருவாக்கியுள்ளனர்.
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த குழந்தைகள் கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமருக்காக உருவாக்கிய பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தை சமர்ப்பித்தனர்.
பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிரபலமான படம் இதுதான்!
இதுபற்றி பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் தலைவர் ராஜேஷ் சிங் தயாள் கூறுகையில், "பிரதமர் மீது குழந்தைகளின் அன்பும் பாசமும் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். கடிதத்தை உருவாக்குவதில் பங்களித்த உநரேந்திர பால் (17) என்ற மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கூறுகையில், “எங்கள் பிரதமரின் பிறந்தநாளில் அவருக்கு ஏதாவது பரிசளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்" என்றார்.
அஞ்சலட்டைகளை இணைத்து மிகுந்த முயற்சியுடன் உருவாக்கப்பட்ட இந்த நீண்ட கடிதத்தில் பிரதமருக்கான செய்திகளும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிறருடன் உள்ள அவரது புகைப்படங்களும் அச்சிடப்பட்டு, கையால் எழுதப்பட்ட செய்திகளும் இருந்தன.
குழந்தைகள் பிரதமருக்கு இந்த சிறப்பு வாழ்த்துகளை அனுப்ப ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளைப் பயன்படுத்தினர். அவற்றை இணைத்து உருவாக்கிய இந்தக் கடிதத்தைப் பார்த்த மக்கள் அனைவரும் குழந்தைகளின் முயற்சியைப் பாராட்டினர்
புதிய இந்தியாவின் சிற்பி! 73வது பிறந்தநாளில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து மழை பொழிந்த தலைவர்கள்!