ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் முதல் கூட்டம்!

By Manikanda Prabu  |  First Published Sep 17, 2023, 1:58 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முதல் கூட்டம் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறவுள்ளது


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கிடையே,  ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

Latest Videos

undefined

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகவும், சட்ட செயலாளர் நிதன் சந்திரா குழுவின் செயலாளராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழுவில் இடம்பெற முடியாது என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்து விலகி விட்டார்.

மெட்ரோவில் பிரதமர் மோடி: பாட்டு பாடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பெண்!

இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இதனை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!