மெட்ரோவில் பிரதமர் மோடி: பாட்டு பாடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பெண்!

By Manikanda Prabu  |  First Published Sep 17, 2023, 1:40 PM IST

டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடிக்கு சமஸ்கிருதத்தில் பாட்டு பாடி பெண் ஒருவர் வாழ்த்து சொல்லிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிரதமர் மோடியின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் கட்சித் தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

டெல்லி துவாரகாவில் யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் கட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திறந்து வைத்தார். முன்னதாக, மாநாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

Tap to resize

Latest Videos

 

டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயணிகளுடன் கலந்துரையாடினார். பயணிகளும் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். pic.twitter.com/yFn3QmDFnw

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

 

பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, பெண்கள், குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமருடன் மெட்ரோ பயணிகள் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் சமஸ்கிருதத்தில் பாடலைப் பாடி பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

प्रधानमंत्री मोदी ने नए रूट पर चलने वाली दिल्ली मेट्रो ट्रेन में सफर किया. तभी एक यात्री ने गाना गाकर प्रधानमंत्री को जन्मदिन की शुभकामनाएं दीं. pic.twitter.com/JsWialxqir

— Asianetnews Hindi (@AsianetNewsHN)

 

டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையில் ஒரு புதிய மெட்ரோ வழித்தடமும் இன்று திறக்கப்பட்டுள்ளது. யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் திட்டத்தின் முழுப் பரப்பளவு 8.9 லட்சம் சதுர மீட்டர், இதில் 1.8 லட்சம் சதுர மீட்டரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. பிரம்மாண்டமான கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை அங்கு நடத்தலாம்.

பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிரபலமான படம் இதுதான்!

click me!