Narendra Modi: பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம்! சாகச வாழ்க்கையில் அறியப்படாத தகவல்கள்

Published : Sep 17, 2023, 07:51 AM ISTUpdated : Sep 17, 2023, 07:55 AM IST
Narendra Modi: பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம்! சாகச வாழ்க்கையில் அறியப்படாத தகவல்கள்

சுருக்கம்

டீ விற்பவராக இருந்து இந்தியாவின் பிரதமர் வரை மோடியின் வாழ்க்கைக் கதை ஒரு சாகசக் கதையைப் போல அனைவரையும் கவர்கிறது. இருப்பினும், அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

நரேந்திர மோடி என்ற பெயரைப் பற்றி யாருக்கும் அறிமுகம் தேவையில்லை. டீ விற்பவராக இருந்து இந்தியாவின் பிரதமர் வரை மோடியின் வாழ்க்கைக் கதை ஒரு சாகசக் கதையைப் போல அனைவரையும் கவர்கிறது. இருப்பினும், அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

இந்த செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், அவரைப் பற்றி இதுவரை கேள்விப்படாத சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

திருமணத்திற்கு மறுத்துவிட்டார்

நரேந்திர மோடி இப்போதைப் போலவே இளமைப் பருவத்திலும் கலகக்காரராகவே இருந்தார். தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளம்பெண்ணை திருமணம் செய்துவைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தபோது, அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. இது நிறைய பிரச்சனைகளை உருவாக்கியது. ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக நின்று தனிமையான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.

ஒருமுறைகூட விடுமுறை எடுக்கவில்லை

நரேந்திர மோடி தீவிர செயல்பாட்டாளர். அதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவர் வேலை செய்வதைத் தவிர வேறு எதையும் தனது முதன்மையான முன்னுரிமையில் வைத்திருப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான்; குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகள் பணியாற்றியபோதும் சரி, பின்னர் பிரதமராக ஆன பின்பும் சரி, இதுவரை ஒருநாள் கூட அவர் விடுமுறையே எடுக்கவில்லை.

இந்தியாவில் மத சுதந்திரம்: விசாரணை நடத்தும் அமெரிக்க ஆணையம்!

குடும்பப் பின்னணி

மோடி தன்னை 'ஏழை' என்று பலமுறை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பது உண்மை. அவரது தாயார் வீடுகளில் பாத்திரங்களை கழுவி சம்பாதித்து வந்தார்.

பொழுதுபோக்குகள்

நரேந்திர மோடிக்கு கவிதைகள் எழுதுவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் உண்டு என்பது வெகு சிலருக்கே தெரியும். அவர் தனது தாய் மொழியான குஜராத்தியில் எழுதுவார். சில புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் புகைப்படங்களை விரும்புபவர். புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் எடுத்த அழகிய புகைப்படங்கள் கண்காட்சியாகவும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவில் படித்தவர்

நரேந்திர மோடி அமெரிக்காவில் இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ் குறித்த மூன்று மாத படிப்பை முடித்திருந்தார். இந்த படிப்புகள் இறுதியில் இந்தியாவில் ஒரு சிறந்த தலைவராக அவரது ஆளுமை மற்றும் தாக்கத்தை செம்மைப்படுத்த உதவியது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்தனை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா? முழு லிஸ்ட் இதோ

புகைபிடிப்பதில்லை, குடிப்பதில்லை

மோடி ஒரு ஆன்மிகவாதி. ஆரோக்கியமான மற்றும் எளிமையான வாழ்க்கையை நடத்துகிறார். அவர் புகைபிடிப்பதும் இல்லை. வேறு எந்த போதை பழக்கமும் அவரிடம் இல்லை. மேலும், அவர் சைவ உணவை முறையைத் தீவிரமாக பின்பற்றுகிறார். தினமும் காலையில் யோகா செய்வதை ஒருபோதும் தவிர்ப்பதில்லை.

வீட்டை விட்டு வெளியேறினார்

பிரதமர் மோடி, தனது வாழ்க்கையை மத சேவைக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தார். இதற்காக தனது கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி, கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்திற்குச் சென்றார். பின்னர் 28 வயதில், 1978 ஆம் ஆண்டு தான் பட்டப்படிப்பை முடித்தார்.

ஒன்பது ஆண்டுகால ஆட்சி.. இதுவரை மோடி அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டங்கள் என்னென்ன? - ஒரு சிறப்பு பார்வை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!