இந்திய தலைநகர் டெல்லியில், அதன் விமான நிலையத்திற்கு செல்லும் மெட்ரோ பாதையில் பயணிக்கும் மெட்ரோ ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இந்தியாவின் அதிவேக மெட்ரோ நடைபாதையில், படிப்படியாக 90 கிமீ வேகத்தில் இருந்து 120 கிமீ வேகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, "டிஎம்ஆர்சியின் பொறியாளர்கள், பல அரசு நிறுவனங்கள் மற்றும் டொமைன் நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததன் மூலம் துல்லியமான திட்டமிடல் மற்றும் காலக்கெடுவைச் செயல்படுத்துவதன் மூலம்" சாத்தியமானது என்பது குறிபிடித்தக்கது.
"நாளை செப்டம்பர் 17 முதல், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) அதன் விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதையை, மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப் போகிறது" என்று டிஎம்ஆர்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் பாதையாக இது மாறியுள்ளது.
பிரதமர் மோடி பெற்ற சர்வதேச உயரிய விருதுகள் எத்தனை தெரியுமா? முழு பட்டியல் இதோ..
துவாரகாவில் யஷோபூமி என பெயரிடப்பட்ட இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐஐசிசி) முதல் கட்டத்தையும், துவாரகா செக்டார் 21ல் இருந்து டெல்லி மெட்ரோவின் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனை, துவாரகா செக்டார் 25ல் புதிய மெட்ரோ நிலையம் வரை நீட்டிப்பதையும், பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். .
தில்லியிலிருந்து யஷோபூமி துவாரகா செக்டார்-25 வரையிலான மொத்தப் பயணம் சுமார் 21 நிமிடங்கள் ஆகும். முன்னதாக, புது தில்லி மற்றும் துவாரகா செக்டார் 21 இடையேயான பயண நேரம் தோராயமாக 22 நிமிடங்களாக இருந்தது, இப்போது இந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே சுமார் 19 நிமிடங்களாக நேரம் குறைந்துள்ளது, இது மூன்று நிமிடங்களை சேமிக்க வழிவகுத்துள்ளது.
புது டெல்லிக்கும், டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3க்கும் இடையே தோராயமான பயண நேரம் சுமார் 15 நிமிடங்கள் 30 வினாடிகளாக இருக்கும். முன்னதாக, இது 18 நிமிடங்களுக்கு சற்று அதிகமாக இருந்ததாக டிஎம்ஆர்சி தெரிவித்துள்ளது.