ஒன்பது ஆண்டுகால ஆட்சி.. இதுவரை மோடி அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டங்கள் என்னென்ன? - ஒரு சிறப்பு பார்வை!

By Ansgar R  |  First Published Sep 16, 2023, 11:12 PM IST

செப்டம்பர் 17, 1950ல், அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், குடியரசாக ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் பிறந்தவர் தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீராபா மோடியின் ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை அவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது ஆரம்ப காலத்திலிருந்தே, பிரதமர் நரேந்திர மோடி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்து வந்தவர். 1970 களில் இருந்து அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், 1990களின் பிற்பகுதி வரை அவரது அரசியல் வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றே கூறலாம்.

ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக அதாவது, 2014ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் மோடி அவர்கள் இந்திய பிரதமராக பணியாற்றி வருகின்றார். அவருடைய இந்த 9 ஆண்டுகளாக பயணத்தில் அவருடைய அரசு பல்லவேறு திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவில் அது குறித்து காணலாம். இதுவரை மோடி தலைமையிலான அரசு சுமார் 25க்கும் அதிகமான திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அதில் முக்கியமான 5 திட்டங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

Tap to resize

Latest Videos

பிரதமர் மோடி பெற்ற சர்வதேச உயரிய விருதுகள் எத்தனை தெரியுமா? முழு பட்டியல் இதோ..

ஜன்தன் யோஜனா

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 15 ஆகஸ்டு 2014ம் ஆண்டு சுதந்திர தின உரையில், 'பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா' (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7.5 கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.

ஸ்கில் இந்தியா மிஷன்

கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இன்னொரு திட்டம் தான் ஸ்கில் இந்தியா மிஷன். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்திற்காக இந்தியா முழுவதும் சுமார் 14,000க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களும், 700க்கும் மேற்பட்ட கௌசல் கேந்திரா மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

உஜாலா யோஜனா

மோடி அரசால் கடந்த 2015ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த திட்டம். சுமார் 77 கோடி மின் விளக்குகளை LED விளக்குகளாக மாற்றும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஒரு பரந்த சமூக இயக்கத்தின் ஒரு பகுதியாகும், அதன் குறிக்கோள் பொருளாதாரத் தேவைகளைக் குறைப்பதுடன், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுச் செலவுகளின் அடிப்படையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே உள்ள பிளவைக் குறைப்பதுதான்.

ஸ்டார்ட் அப் இந்தியா

ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் என்பது நாட்டின் தொழில்முனைவோருக்கு மலிவான வணிக நிதியை வழங்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் ஒரு முன்முயற்சியாகும். இந்த திட்டம் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களில் இருந்து பெண் தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவோருக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மானியம் பெற்ற கடன் தொகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடல் பென்ஷன் யோஜனா 

இது மத்திய அரசின் இதர எந்த நலத் திட்டத்திலும் இணையாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வுக் காலத்தில் நிலையான ஒரு தொகையை பென்ஷனாக வழங்கும் திட்டமாகும். இந்த பென்ஷன் தொகைக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இணைய குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 40 ஆகும்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா 

அதாவது விவசாயம் அல்லாத மற்றும் கார்ப்பரேட் அல்லாத குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன்களை வழங்குகிறது இந்த திட்டம். தகுதி உள்ள நிறுவனங்கள் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடன்களைப் பெறலாம்.

பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்தனை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா? முழு லிஸ்ட் இதோ

click me!