பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை செப்டம்பர் 17 அன்று 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பதவிக் காலத்தில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் பல கவுரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகள்
1. 2016-ம் ஆண்டு, பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றிருந்த போது, அவருக்கு சவூதி அரேபியாவின் உயரிய சிவிலியன் கவுரவம் - மன்னர் அப்துல்அஜிஸ் சாஷ் வழங்கப்பட்டது. பிரதமருக்கு மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் இந்த உயரிய விருதை வழங்கினார்.
2. 2016-ம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தானின் உயரிய சிவிலியன் கவுரவமான காஜி அமீர் அமானுல்லா கானின் ஸ்டேட் ஆர்டர் விருது வழங்கப்பட்டது.
3. 2018 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்ட போது, அவருக்கு பாலஸ்தீன அரசின் கிராண்ட் காலர் விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்தீனத்தின் உயரிய கௌரவம் இதுவாகும்.
4. 2019-ம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆஃப் சயீத் விருது வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயரிய சிவிலியன் கௌரவமாகும்.
5. 2019-ல் ரஷ்யா அவர்களின் உயரிய சிவிலியன் விருதான, ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது.
டீ கடை டூ செங்கோட்டை: பிரதமர் மோடி அரசியல் பயணம்!
6. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய கவுரவமான நிஷான் இசுதீனின் சிறப்புமிக்க ஆட்சியின் ஆர்டர் வழங்கப்பட்டது. இது வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்.
7. பிரதமர் மோடி 2019-ம் ஆண்டில் புகழ்பெற்ற கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் விருதைப் பெற்றார். இந்த கௌரவத்தை பஹ்ரைன் வழங்கியது.
8. 2020-ம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தால் லெஜியன் ஆஃப் மெரிட், சிறந்த சேவைகள் மற்றும் சாதனைகளின் செயல்திறனில் தனித்துவமான தகுதியான நடத்தைக்காக வழங்கப்படும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆயுதப் படைகளின் விருது வழங்கப்பட்டது.
9. 2021 டிசம்பரில் பூடான் அரசு பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த சிவிலியன் அலங்காரமான ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போவை வழங்கி கௌரவித்துது.
10. 2023 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின் போது, பலாவ் குடியரசின் ஜூனியர் சுராங்கல் எஸ். விப்ஸ், எபகல் விருதை அவருக்கு வழங்கினார்.
11. பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், பிஜியின் மிக உயரிய கவுரவம், கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கினார்.
12. பப்புவா நியூ கினியாவின் கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே, பிரதமர் மோடிக்கு கிராண்ட் கம்பேனியன் ஆஃப் லோகோஹு விருதை வழங்கினார். இது பப்புவா நியூ கினியாவின் உயரிய கௌரவமாகும்.
13. ஜூன் 2023 இல், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி, பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய அரச கௌரவமான 'ஆர்டர் ஆஃப் நைல்' விருதை வழங்கினார்.
14. ஜூலை 13, 2013-ல் பிரான்ஸின் மிக உயரிய விருதான பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்த விருதை வழங்கினார்.
15. ஆகஸ்ட் 25, 2023 அன்று, பிரதமர் மோடிக்கு கிரீஸ் அதிபர் கேடரினா சகெல்லரோபௌலோ 'தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை வழங்கினார்.
மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளைத் தவிர, பிரதமர் மோடிக்கு உலகெங்கிலும் உள்ள முக்கியமான அமைப்புகளால் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
1. சியோல் அமைதி பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே நல்லிணக்கம் மற்றும் உலக அமைதிக்கான பங்களிப்புகள் மூலம் தங்கள் முத்திரையைப் பதித்த சியோல் அமைதி பரிசு கலாச்சார அறக்கட்டளையால் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு 2018-ல் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.
2. யுனைடெட் நேஷன்ஸ் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது: இது ஐநாவின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் விருது. 2018 ஆம் ஆண்டில், உலக அரங்கில் அவரது தைரியமான சுற்றுச்சூழல் தலைமைக்காக பிரதமர் மோடியை ஐநா அங்கீகரித்தது.
3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது 2019இல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ஆண்டுதோறும் ஒரு நாட்டின் தலைவருக்கு வழங்கப்படுகிறது. தேசத்திற்கான சிறந்த தலைமைத்துவத்திற்காக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்தனை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா? முழு லிஸ்ட் இதோ
4. 2019 ஆம் ஆண்டில், ஸ்வச் பாரத் அபியான் திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கப்பட்டது. ஸ்வச் பாரத் பிரச்சாரத்தை "மக்கள் இயக்கமாக" மாற்றிய இந்தியர்களுக்கு பிரதமர் மோடி இந்த விருதை அர்ப்பணித்தார்.
5. 2021 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் எனர்ஜி ரிசர்ச் அசோசியேட்ஸ் செராவின் உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலத்திற்கான தலைமையின் அர்ப்பணிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது.