கோடீஸ்வரராக மாறியிருக்கும் அனூப் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தவர். அதற்கு முன்னதாக ஹோட்டலில் சமையல்காரராக பணியாற்றி வந்தார்.
கேரள மாநில லாட்டரித் துறை அண்மையில் வெளியிட்ட ஓணம் பம்பர் லாட்டரில் முடிவில் முதல் பரிசு பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீவராஹத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் ரூ.25 கோடி பரிசுத் தொகையை அள்ளிச் சென்றிருக்கிறார்.
இப்போது கோடீஸ்வரராக மாறியிருக்கும் அனூப் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தவர். அதற்கு முன்னதாக ஹோட்டலில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலை முன்னிட்டு அனூப் பகவதி ஏஜென்சியில் லாட்டரி டிக்கெட்டை வாங்கினார்.
undefined
அனூப் TJ 750605 என்ற டிக்கெட்டை வைத்திருந்தார். அதுதான் அவருக்கு ₹25 கோடியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. வரிச்சலுகைக்குப் பிறகு அவருக்கு அனூப்க்கு 15.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இதனால், அனூப் முழு உற்சாகத்தில் இருக்கிறார். முன்னதாக ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த அவர், மலேசியா சென்று சமையல்காரராக பணியாற்ற திட்டமிட்டிருந்தார். அதன்காக வங்கி கடனும் பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற சீட்டை விற்ற லாட்டரி ஏஜென்டு தங்கராஜ் என்பவருக்கும் கமிஷன் கிடைக்கும்.
பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன முகவுரையை வாசிப்பது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
கேரள லாட்டரி வரலாற்றில் அதிகபட்சமாக இந்த ஆண்டு ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசாக ரூ.25 கோடி, இரண்டாம் பரிசாக ரூ.5 கோடி ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 பேருக்கு தலா 1 கோடியும் வழங்கப்பட்டது.
கேரள அரசுக்கு லாட்டரி முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு 67 லட்சம் ஓணம் பம்பர் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. டிக்கெட் விலை 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கேரளாவை ஆண்ட மகாபலியின் ஆட்சியில் நல்லாட்சி நடந்ததை நினைவு கூறும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருவோணத்துடன் ஓணம் கொண்டாட்டத்தின் முடிவுக்கு வருகிறது. அப்போது பல்வேறு சடங்குகள் நடைபெறும்.
ஓணம் மலையாளிகளால் முக்கியமாகக் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழா ஆகும். குடும்பம் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடி பாரம்பரிய விளையாட்டுகள், இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். 'ஓணம் சதையா' என்ற விருந்தும் கேரள ஓணம் பண்டிகையின் முக்கியமான அடையாளம் ஆகும்.
கர்நாடகாவில் ஓங்கும் காங்கிரஸ் கை! கட்சி தாவிய 15 தலைவர்கள்! அதிர்ச்சியில் பாஜக, ஜேடிஎஸ்!