பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கான இடமாக மட்டும் இல்லாமல், அதற்கு அப்பால், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட செயல்களுக்காக மக்களை இணைக்கும் ஆன்லைன் தளமாகவும் நமோ செயலி உருவாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 73வது பிறந்தநாள். இந்த நாளை உலகெங்கிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் விதவிதமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் மோடி தனது ஆதரவாளர்கள் மற்றும் சக குடிமக்களின் அன்பான வாழ்த்துகளின் வெள்ளத்தில் மூழ்கி வருகிறார்.
இந்தியாவின் தலைசிறந்த தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கான தளங்களில் ஒன்றாக 'NaMo' செயலி உள்ளது. நமோ செயலி மூலம் கோடிக்கணக்கானவர்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள்.
undefined
பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கான இடமாக மட்டும் இல்லாமல், அதற்கு அப்பால், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட செயல்களுக்காக மக்களை இணைக்கும் ஆன்லைன் தளமாகவும் நமோ செயலி உருவாகியுள்ளது.
Narendra Modi: பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம்! சாகச வாழ்க்கையில் அறியப்படாத தகவல்கள்
பாஜக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் சேவை மனப்பான்மை ஊக்குவிப்பதன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கும் வாய்ப்பை நமோ செயலி அளிக்கிறது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்புகள் மூலம் தேசத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
நமோ செயலி: https://nm-4.com/Seva
மக்கள் பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்து தங்கள் பெருமிதத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அர்த்தமுள்ள விதத்தில் வழங்க முடியும். பயனர்கள் பங்களிக்கக்கூடிய துறைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் நமோ செயலி கொடுக்கிறது.
பயனர்கள் தங்கள் சேவைப் பணிகள் தொடர்பான படங்களைப் பகிர்ந்து பேட்ஜ்களைப் பெறும் அம்சமும் உள்ளது. பயனர்கள் தங்கள் சேவைகளை ஆவணப்படுத்த ஒன்பது வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த பேட்ஜ்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழலாம். அது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இதேபோன்ற முயற்சிகளில் மற்றவர்களும் ஈடுபட ஊக்குவிக்கும்.
நமோ செயலிக்கு ரூ.5 முதல் ரூ.100 வரை நன்கொடைகளையும் வழங்கலாம். நமோ செயலில் சேகரிக்கப்படும் நன்கொடை 'தூய்மை இந்தியா', 'கிசான் சேவா' போன்ற இயக்கங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த நன்கொடைகள் மூலம் பயனர்கள் தங்கள் இதயத்திற்கு நெருக்கமான பொதுச் சேவை பணிகளை ஆதரிக்க முடியும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமாவாசை நாளில் தொடங்கியது ஏன்? அண்ணாமலை கேள்வி