மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிப் பேசியிருக்கிறார்.
ஆர்.கே.சிங் ஏபிபி செய்தியின் சிறப்பு நிகழ்ச்சியான 'நேதாஜி ஆன் ப்ரேக்ஃபாஸ்ட்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஜூன் 2011 முதல் ஜூன் 2013 வரை மத்திய உள்துறை செயலாளராக இருந்த ஆர்.கே.சிங், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் முடிவுகளை சோனியா காந்தி மாற்றியதாகக் கூறுகிறார்.
undefined
தற்போதைய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், UPA அரசாங்கத்தில் மத்திய எரிசக்தி அமைச்சராகவும், மத்திய உள்துறை செயலாளராகவும் இருந்தபோது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது தொடர்பாகப் பேசியுள்ளார். "பிரதமர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவதற்கான வரைவு தயாரிக்கப்பட்டது. இருப்பினும், சோனியா காந்தி தலையிட்டு, மத்திய அமைச்சர்கள் பணியாற்றாமல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று வாதிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி அமைச்சர் ராஜ் குமார் திடீர் ராஜினாமா! ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகல்!
बतौर प्रधानमंत्री मनमोहन सिंह और नरेंद्र मोदी में क्या अंतर है?
'नाश्ते पर नेताजी' में देखिए केंद्रीय ऊर्जा मंत्री आरके सिंह से EXCLUSIVE बातचीत के साथhttps://t.co/smwhXURgtc … pic.twitter.com/8Q925w2f4P
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் பணியாற்றுவதற்கு என்ன வித்தியாசம் என்று கேட்டபோது இவ்வாறு ஆர்.கே. சிங் பதில் அளித்துள்ளார்.
"பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களே ஆணையத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்னிடம் காட்டியபோது இது சரியல்ல என்றேன். சிவராஜ் பாட்டீலும் எனது வாதத்தை ஒப்புக்கொண்டார்” என்றும் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.
ஆர்.கே.சிங்கின் கருத்து, சோனியா காந்தி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தியதைச் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங்கின் முடிவெடுக்கும் சக்தியை பற்றிய உறுதியற்ற தன்மையையும் எடுத்துரைக்கிறது. சோனியா காந்தியின் விருப்பங்களுக்கு இணங்கியே அவர் செய்ல்பட்டார் என்பதுறகு சான்றாக உள்ளது என ஆர்.கே.சிங்கின் ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
மன்மோகன் சிங் ஒரு நல்ல மனிதர், ஆனால் முடிவெடுப்பதில் சுயமாக செயல்பட முடியாதவர் என்று ஆர்.கே.சிங் சித்தரித்திருப்பது, மோடியைப் புகழ்வதற்காகத்தான் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.
'சென்னை என் மனதை வென்றது!' ரோடு ஷோவில் கூடிய கூட்டத்தைப் பார்த்து உருகிய பிரதமர் மோடி