பாம்பு மற்றும் கீரிப்பிள்ளை குழிக்குள் சண்டையில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பை சொன்னாலே பயந்து நடுங்கும் பலர் உலகம் முழுவதும் உள்ளனர். விலங்கினத்தையோ, மனிதனையோ கூட ஒரே சீறினால் பயமுறுத்தும் பாம்புகள் பல இருந்தாலும், கிங் கோப்ரா பாம்பு என்றாலே பயம் வருவது இயல்புதான். பொதுவாக, பெரிய விலங்குகள் கூட நாகப்பாம்பிலிருந்து விலகி இருப்பது நல்லது என்று கருதுகின்றன.
சமீபத்தில், நாகப்பாம்பு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நாகப்பாம்பு, கீரிப் பிள்ளையுடன் சண்டையிடுகிறது. நாகப்பாம்புடன் குழிக்குள் சிக்கிய கீரி ஒன்றுக்கொன்று படுபயங்கரமாக சண்டையிட்டு கொள்கிறது.
இந்த வீடியோவை X இல் @TheBrutalNature என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் பலரும், பாம்பு மற்றும் கீரி சண்டை எப்போதும் ட்ரெண்டிங் தான் என்று பதிவிட்டு வருகின்றனர்.