rahul: bharat jodo yatra: பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்பு

Published : Oct 03, 2022, 10:46 AM IST
rahul:  bharat jodo yatra: பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்பு

சுருக்கம்

பாரத் ஜோடோ நடைபயணத்தில் ராகுல் காந்தி எம்.பியுடன் வரும் 6ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத் ஜோடோ நடைபயணத்தில் ராகுல் காந்தி எம்.பியுடன் வரும் 6ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தை கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிரந்து தொடங்கினார். காஷ்மீர் வரை செல்லும் இந்தநடைபயணத்தில் ராகுல் காந்தி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 3,500கி.மீ தொலைவுக்கும் நடக்க உள்ளார். 

தமிழகத்தைக் கடந்து, கேரள மாநிலத்தில் 18 நாட்களுக்கும் மேலாகச் சென்று தற்போது ராகுல் காந்தி நடைபயணம் கர்நாடக மாநிலத்துக்குள் சென்றுள்ளது. 

இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

முலாயம் சிங் உடல்நிலை கவலைக்கிடம்: குருகிராம் மருத்துவமனைக்கு மாற்றம்

காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில் “ வரும் 6ம் தேதி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். இரு நாட்கள் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி செலவிடுகிறார். கூர்க் பகுதியில் யாத்திரை செல்லும்போது, ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்பார்” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 125 பேர் அவ்வப்போது ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்று வருகிறார்கள். கடந்த மாதம் 7ம்தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் 25 நாட்களைக் கடந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். உடையில் ஊர்வலமாக சென்ற அமைச்சர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

மைசூரு நகரில் நேற்று ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது திடீரென்று மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி உரையாற்றினார். மழையில் நனைந்து கொண்டே காங்கிரஸ் தொண்டர்களும் ராகுல் காந்தியின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டனர். இந்த வீடியோவை காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 

இனி போன் வந்தா வந்தே மாதரம்-னு தான் சொல்லனும்... மகாராஷ்டிரா அரசு அதிரடி!!

ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மைசூரு நகரில் காந்திஜெயந்தி அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்த பேசியபோது மழை கொட்டியது.ஆனால் திரளமான மக்கள் கூட்டத்தைப் பார்த்த ராகுல் காந்தி உற்சாகமடைந்துவிட்டார். . இது ஒரு தெளிவான அறிவிப்பு. வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்பதிலிருந்தும், வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக பேசுவதிலிருந்தும் #பாரத் ஜோடோ யாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது”எ னத் தெரிவித்துள்ளார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!