வெறும் 6 மாதம் பிளான்.. ஆனால் 8 ஆண்டுகள் சுற்றி சுழன்ற மங்கல்யான்.. பேட்டரி தீர்ந்துபோனதால் தொடர்பு துண்டிப்பு

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2022, 10:14 AM IST
Highlights

எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்து போனதால் மங்கள்யான் தனது பணியை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  8 ஆண்டுகாலம் செவ்வாய் கிரக ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த மங்கல்யான் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளதாக தெரிகிறது. 

எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்து போனதால் மங்கள்யான் தனது பணியை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  8 ஆண்டுகாலம் செவ்வாய் கிரக ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த மங்கல்யான் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளதாக தெரிகிறது. 

ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2013ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியது. சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பில் மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரக ஆய்வு பணிக்கு இஸ்ரோ அனுப்பியது.  பிஎஸ்எல்வி 25 ராக்கெட் மங்கள்யான் விண்கலத்தை சுமந்து சென்று செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்டது, 2014 செப்டம்பர் மாதம் 24-ல்  அதன் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் அது இணைந்தது.

இதையும் படியுங்கள்: ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலையா.? ஐ.டி ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனங்கள் !

அதுவரை  புரியாத புதிராக இருந்து வந்த செவ்வாய் கிரகத்தின் பல தகவல்கள் மங்கள்யான் மூலம் நமக்குக் கிடைக்க பெற்றது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் அதில் உள்ள தாதுக்கள், அதன் தன்மை, மீத்தேன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள மங்கல்யான் இந்திய விஞ்ஞானிகளுக்கு பெரிதும் கை கொடுத்தது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் மங்கள்யான் என்ற பெருமையைப் பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய நிலவான போபோஸை இந்தியாவின் மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியது.

இதையும் படியுங்கள்: இனி போன் வந்தா வந்தே மாதரம்-னு தான் சொல்லனும்... மகாராஷ்டிரா அரசு அதிரடி!!

செவ்வாய் கிரகத்திலிருந்து 7200 கிலோமீட்டர் தூரத்தில் நிலவும், 4200 கிலோ மீட்டர் தொலைவில் போபோஸ்சும் இருப்பதும் தெரிந்தது. அதில் தண்ணீர் இருப்பதும் விண்கற்கள் மோதலினால் அது உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே செயல்பட கூடிய வகையில் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில் சுமார் 8 ஆண்டுகாலம் செவ்வாள் கிரகத்தை சுற்றிச்சுழன்று மங்கள்யான் பல தகவல்களை நமக்கு அனுப்பி வந்த நிலையில் தற்போது எரிபொருள் மற்றும் பேட்டரி  திருந்து விட்டால் அது தனது ஆராய்ச்சி பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தின் தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கிரகத்தின் காரணமாக மங்கள்யானின் எரிபொருள் தீர்ந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அனைத்து தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டு இருப்பதால் மங்கள்யானின் இந்த விண்வெளி பயணம் முடிவு குறித்து இஸ்ரோ விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!