உடல்நலக்குறைவால் முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி… பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!!

By Narendran S  |  First Published Oct 2, 2022, 10:49 PM IST

உடல்நலக்குறைவால் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி அகிலேஷ் யாதவிடம் கேட்டறிந்தார். 


உடல்நலக்குறைவால் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி அகிலேஷ் யாதவிடம் கேட்டறிந்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலையா.? ஐ.டி ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனங்கள் !

Tap to resize

Latest Videos

அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது ஆக்ஸிஜன் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அகிலேஷ் யாதவை தொலைப்பேசியில் அழைத்து முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் கேளுங்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இனி போன் வந்தா வந்தே மாதரம்-னு தான் சொல்லனும்... மகாராஷ்டிரா அரசு அதிரடி!!

முன்னதாக ஜூன் 24, 2022 அன்று, முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வழக்கமான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உண்மையில், முலாயம் சிங் யாதவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பிரச்சனை தீவிரமடைவதால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!