ஐடி நிறுவனங்கள் பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை என இரண்டு வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்தன. இப்போது தொற்று குறைந்த பல்வேறு நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் சில நிறுவனங்கள் இன்னும் வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் ஃபரம் ஹோம் சேவைக்கு அனுமதி அளித்து வருகின்றன.
அதை பயன்படுத்திக்கொண்டு பல ஊழியர்கள் தங்களது வேலைக்கு வெளியில் உள்ள தேவைகளை பயன்படுத்தி பகலில் ஒரு வேலை, இரவில் பகுதி நேரத்தில் ஒரு வேலை என செய்து வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனமும் தங்களது ஊழியர்கள் நடத்தை விதிப்படி மூன் லைட்டிங் (moonlighting) என அழைக்கப்படும் இரண்டு வேலையைச் செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்
இன்போசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், 'இரண்டு நேரமும் கிடையாது, இரவு வேறு வேலையும் கிடையாது' மற்றும் 'இரட்டை வாழ்க்கையும் கிடையாது' என தெரிவித்துள்ளது. அதன்படி இன்போசிஸ் ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் நேரம் அல்லது வீட்டில் இருக்கும் நேரங்களில் வேறு நிறுவனங்களுக்கு வேலை செய்யக் கூடாது என எச்சரித்துள்ளது. ஐபிஎம், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் விப்ரோவை போல மூன்லைட்டிங் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி