அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்கு இனி ஹலோவுக்கு பதிலாக வந்தே மாதரம் என்று கூற வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்கு இனி ஹலோவுக்கு பதிலாக வந்தே மாதரம் என்று கூற வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவாசேனா பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்கு இனி ஹலோவுக்கு பதிலாக வந்தே மாதரம் என்று கூற வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். உடையில் ஊர்வலமாக சென்ற அமைச்சர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து அழைப்புகளைப் பெறும் போது, ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் என்று கூற வேண்டும். மேலும் இது அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பொருந்தும். ஹலோ என்ற வார்த்தை அர்த்தமற்றது.
இதையும் படிங்க: புதுவை திமுக தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்; ஆளுநரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
வந்தே மாதரம் என்று உரையாடலைத் தொடங்குவது நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதமே, அமைச்சர் சுதிர் முங்கந்திவார் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.