ஆர்.எஸ்.எஸ். சார்பில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டது. மாநில பாஜக அமைச்சர்கள், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். உடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் இன்று நடைபெற்றது. வள்ளலாரின் பிறந்த ஆண்டு, காந்தியின் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் புதுச்சேரி காமராஜர் சாலை, பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எடப்பாடி ஒரு தொடை நடுங்கி - டிடிவி தினகரன் அதிரடி
இந்த ஊர்வலத்தில் பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் உடையான காக்கி பேண்ட்டு, வெள்ளை நிற சட்டை அணிந்து சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநில அமைச்சரே இதுபோன்று கலந்துகொண்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மேலும் மாநிலத்தில் மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இன்று துணைராணுவப்படையினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் துணைராணுவப் படையினர் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது.
புதுவை திமுக தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்; ஆளுநரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷின் வீதி வழியாக சென்ற இந்த ஊர்வலம் கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலையில் நிறைவடைந்தது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தையொட்டி அசம்பாவதி சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.