புதுவையில் மின்வாரிய ஊழியர்கள் கைது; துணைராணுவ கட்டுப்பாட்டில் மின் நிலையங்கள்

By Dinesh TGFirst Published Oct 3, 2022, 10:30 AM IST
Highlights

புதுச்சேரியில் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மின்வாரிய ஊழியர்களை கைது செய்த காவல் துறையினர் இரவு முழுவதும் காவலில் வைத்து பின்னர் காலையில் விடுதலை செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மின்சார வாரியத்தை தனியார் முழுவதும் மயமாக்குவதற்கு டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆங்காங்கே ஏற்படும் மின்தடையை சரிசெய்ய முடியாத நிலையில் 8 மணி நேரம், 10 மணி நேரம் என பல பகுதிகளிலும் தொடர் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். உடையில் ஊர்வலமாக சென்ற அமைச்சர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்கள் சிலர் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்துவதாகவும், அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஊழியர்கள் இரவு முழுவதும் சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆஜர் படுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் வழங்கிய அறிவுரையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தனியார்மயமாக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் துணைமின் நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வேண்டுமென்றே பியூஸ் கேரியரை பிடுங்கி வைத்து செயற்கை மின்தடையை ஏற்படுத்துகின்றனர். பல பகுதிகளில் மின் கம்பிகள் அறுக்கப்பட்டுள்ளன. 

Mulayam Singh Yadav: UP: முலாயம் சிங் உடல்நிலை கவலைக்கிடம்: குருகிராம் மருத்துவமனைக்கு மாற்றம்

தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலத்தின் 16 துணைமின் நிலையங்களில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!