டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி போகட் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமானவர். டிக்டாக் சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்களை சோனாலி போகட் வெளியிட்டு தனக்கென ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தினார். 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரை டிக்டாக்கில் ஃபாலோ செய்தனர். அவர் இந்தி பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார்.
கடந்த 2008ம் ஆண்டில் பாஜகவில் இணைந்த சோனாலி போகட் கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், கோவாவுக்கு நண்பர்களுடன் சென்ற அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 41.பிறகு போலீசார், மதுவில் போதைப் பொருள் கலந்து அவரை வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..Kohinoor Crown : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?
கொலை செய்த வழக்கில் அவரது உதவியாளர்கள் இருவர், அந்த ஹோட்டலில் இயங்கிவந்த கிளப்பின் உரிமையாளர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அந்த ஹோட்டல் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தது. சோனாலி போகாட் கொலை செய்யப்பட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ஹோட்டலை இடிக்க கோவா அரசு முடிவுசெய்தது.
அதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர் தொடர்ந்த மனுவை தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அந்த ஹோட்டலை இடிக்கும் பணிகளை கோவா மாநில அரசு இன்று காலை தொடங்கியது. இதற்காக புல்டோசர் கொண்டுவரப்பட்டு ஹோட்டல் முன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ.! முகத்தில் 200 தையல்கள்.. 11 வயது சிறுவனை ஆக்ரோசமாக கடித்த பிட்புல் நாய் - அதிர்ச்சி வீடியோ !
ஹோட்டலை இடிக்கும் பணிகளை நிறுத்திவைக்குமாறு ஹோட்டல் உரிமையாளர் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக இன்று காலை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான அமர்வு, ஹோட்டலை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது.
எனினும், குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடம் தவிர மற்ற இடங்களில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட இடங்களை இடிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதுவரை வணிகரீதியான செயல்பாடுகளை நிறுத்திவைக்குமாறு ஹோட்டல் மற்றும் மதுபான விடுதியின் உரிமையாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி போன அதே இடம்.. ‘வேற’ மாறி பிளான் போட்ட பன்னீர்.. ஆடிப்போன ஈபிஎஸ் தரப்பு - இதுதான் காரணமா!