BREAKING : பிரிட்டன் எலிசபெத் ராணி இறப்பு.. ஒரு நாள் துக்கத்தை அனுசரிக்கிறது இந்தியா

By Raghupati RFirst Published Sep 9, 2022, 2:31 PM IST
Highlights

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். 

மேலும் செய்திகளுக்கு..வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும். 

மேலும் செய்திகளுக்கு..Queen elizabeth: பிறப்பு முதல் இறப்பு வரை... எலிசபெத் ராணியின் காலத்தால் அழியாத வாழ்க்கை படங்கள்..

5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியா  ராணி எலிசபெத் மறைவையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் துக்கத்தை அனுசரிப்பதாக கூறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..Kohinoor Crown : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

click me!