டெல்லி அரசின் முழு நிதியுதவிடன் தில்லி பலகலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தீன தயாள் உபாத்யாயா கல்லூரி, நிதி பற்றாக்குறை காரணமாக அங்கு பணிபுரியும் பேராசிரியர்களின் ஊதியத்தை குறைத்துள்ள சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசின் முழு நிதியுதவிடன் தில்லி பலகலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தீன தயாள் உபாத்யாயா கல்லூரி, நிதி பற்றாக்குறை காரணமாக அங்கு பணிபுரியும் பேராசிரியர்களின் ஊதியத்தை குறைத்துள்ள சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தீனதயாள் கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தை நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி, குறைத்து சம்பளம் தருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. | | | | | | pic.twitter.com/yNOo6xIS8P
— Asianetnews Tamil (@AsianetNewsTM)1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி டெல்லி அரசின் நிதியுதவி இயங்கி வருகிறது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தால் முழு நிதியுதவியுடன் தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தீன் தயாள் உபாத்யாயா கல்லூரி செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க:CUET UG 2022 ஆன்சர் கீ வெளியீடு.. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? யுஜிசி அறிவிப்பு
இந்நிலையில் கல்லூரி சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” உதவி பேராசிரியர்களின் நிகர சம்பளம் அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் தொகையில் இருந்து ₹ 30,000 மற்றும் இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் நிகர சம்பளத்திலிருந்து ₹ 50,000 பிடித்தம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Looks like it is not just Punjab but also Delhi which is facing some fiscal crunch.
Delhi’s revenue surplus
2010-11: Rs 10,642 crores
2021-22: Rs 3,039
BTW, between 2015-16 and 2019-20, Delhi saw a 122.48 per cent increase in grants in aid from the Government of India. pic.twitter.com/aiPR4jKUbw
நிதிப் பற்றாக்குறையால், ஜூலை மாதத்திற்கான சம்பளத்தில் உதவிப் பேராசிரியர்களின் நிகர சம்பளத்திலிருந்து ₹ 30,000 மற்றும் இணைப் பேராசிரியர்கள்/பேராசிரியர்களின் நிகர சம்பளத்திலிருந்து ₹ 50,000 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி கிடைக்கும் போது இந்த தொகை மீண்டும் விடுவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:கடமை பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையையும் திறந்து வைத்து மரியதை!!
டெல்லியில் கல்வியை மேம்படுத்தும் வகையில் தற்போதைய ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மாதிரி பள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நவீன வகையான டேபிள் சேர்கள், புரொஜெக்டர், ஸ்மார்ட் போர்டுகள் எனத் தனியார் பள்ளிகளுக்கு இணையான அனைத்து வசதிகளும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளன.
In and Govts have all the money to spend on 's self-glorification by splurging taxpayers' money on media.
But they have no money to pay teachers and staff.
This is the 'Kejriwal Model' high on low on integrity. pic.twitter.com/fgE7aBeZNF
இந்நிலையில் தற்போது டெல்லி அரசின் நிதியுதவியுடன் இயங்கும் கல்லூரியில் நிதி பற்றாக்குறை காரணமாக சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பாஜகவினர் தற்போது ஆம் ஆத்மி அரசை விமர்சித்து வருகின்றனர். மேலும் கெஜ்ரிவாலின் கொள்கைகளை சுட்டிக்காட்டி, தேர்தல் இலவசங்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் திவாலாக்கும் சோதனைகள் என்று விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க:உள்ளாடை வாங்க தான் டெல்லி சென்றேன்… சர்ச்சையை கிளப்பிய ஹேமந்த் சோரனின் சகோதரர்!!