13 மத்திய அமைச்சர்கள் படுதோல்வி! பாஜகவுக்கு வசமாக ஆப்பு வைத்த மக்கள் தீர்ப்பு!

By SG Balan  |  First Published Jun 5, 2024, 8:59 AM IST

2024 மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், பாஜக ஆட்சியில் அங்கம் வகித்த 13 மத்திய அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர்.


2024 மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த பாஜக ஆட்சியில் அங்கம் வகித்த 13 மத்திய அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர்.

மக்களவைத் தோ்தலில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி படுதோல்வி அடைந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட அவரை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Latest Videos

undefined

2019ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் இதே தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி இந்த முறை, ராகுல் காந்தியின் நெருங்கிய ஆதரவாளரான கே.எல்.சர்மாவிடம் தோற்றுவிட்டார்.

தமிழர்களை உங்களால் எப்போதும் ஆள முடியாது.. ட்ரெண்டாகும் ராகுலின் பழைய வீடியோ - அன்று அவர் பேசியது என்ன?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகா் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரிடம் மண்ணைக் கவ்வியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சசி தரூரைவிட சுமார் 24,000 வாக்குகள் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

2021ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜகவினர் ஓட்டி வந்த கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் இருந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், உ.பி.யின் கெரி மக்களவைத் தொகுதியில் அஜய் மிஸ்ரா, சமாஜ்வாதி வேட்பாளர் உத்கர்ஷ் வா்மாவை எதிர்த்துக் களமிறங்கி, 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி தொகுதியில் மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டாவையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டா 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முண்டாவை வீழ்த்தியிருக்கிறார்.

Loksabha Election 2024 : திருவனந்தபுரத்தில் நிலவிய கடும் போட்டி - 4வது முறை வெற்றியை தக்கவைத்த சசி தரூர்!

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மக்களவைத் தொகுதியில் கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அருப் சக்ரவர்த்தியிடம் 32,778 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

விவசாயத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, ராஜஸ்தானின் பார்மரில் தோல்வி அடைந்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் உம்மேதா ராம் பெனிவால் 4.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகனும் தோல்வி அடைந்தார். தமிழகத்தின் நீலகிரியில் திமுகவின் ஆ. ராசா 2,40,585 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக், கூச் பெஹார் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் ஜெகதீஷ் சந்திர பாசுனியாவிடம் சுமார் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் முசாபர்நகர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மாலிக்கிடம் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் நித்யானந்த் ராய் பீகாரில் உள்ள உஜியார்பூர் மக்களவைத் தொகுதியில் ஆர்.ஜே.டி.யின் அலோக் மேத்தாவை 4,661 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா? ராகுல்காந்தி சொன்ன பதில்

click me!