டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மூலம் மக்களை ஏமாற்ற பலே வேலைகளை பார்த்துவருகின்றனர் scammers என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. இந்நிலையில் "சிம் ஸ்வாப்பிங் மோசடி" என்ற புதிய வகை மோசடிக்கு ஆளாகி 50 லட்சத்தை இழந்ததாக டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
ஊடங்களுக்கு அவர் அளித்த தகவலின்படி, அந்த பெண் வழக்கறிஞருக்கு தெரியாத எண்ணிலிருந்து 3 முறை மிஸ்ட் கால் வந்துள்ளது. அதனையடுத்து அவர் வேறு எண்ணிலிருந்து அந்த எண்ணுக்கு திரும்ப அழைத்தபோது, அந்த பெண்ணுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதற்காக சரியான முகவரியை கூறுங்கள் என்று மறுமுனையில் இருந்து ஒருவர் பேசியுள்ளார்.
உடனே அந்த பெண் தனது வீட்டு முகவரியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது வீட்டு முகவரியை பகிர்ந்துகொண்டப் பிறகு, 35 வயதான அந்த பெண்னின் வங்கியிலிருந்து இரண்டு பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. அந்த பெண் 50 லட்சம் ரூபாய் இழந்ததாகவும், மோசடி செய்த அந்த நபர்களுடன் OTPஐ (ஒரு முறை கடவுச்சொல்) போன்ற எந்த தகவலையும் அந்த பெண் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
சிம் ஸ்வாப்பிங் ஸ்கேம் என்றால் என்ன?
மோசடி செய்பவர்கள், நமது சிம் கார்டுக்கான அணுகலைப் பெறுகிறார். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் சிம் கார்டுடன் நமது மொபைல் எண்ணை இணைக்க, நமக்கு சிம் சேவை வழங்கும் நெட்வொர்க் வழங்குநரை ஏமாற்றுகிறார்கள்.
உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
ஒருவர் மனதில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் இதோ..
உங்களுக்கு சந்தேகமாகத் தோன்றும் நபர்களிடம் உங்கள் முகவரி மற்றும் பிற சொந்த விவரங்களை பகிரவேண்டாம்.
உங்கள் சிம் கார்டு லாக் ஆகிவிட்டது என்று தெரிந்தாலோ? அல்லது "செல்லுபடியாகாது" என்பது போன்ற செய்திகள் வந்தாலோ, உடனடியாக உங்கள் சிம் சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு உங்கள் எண்ணைத் பிளாக் செய்யவும்.
நீங்கள் சிம் லாக் வசதியையும் பெறலாம். இது உங்கள் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
மேலும் சிம் கார்டு சிக்கலில் உள்ளது என்று தெரிந்தால், உடனே உங்கள் UPI மற்றும் இணைய வங்கி கணக்குகளை கவனித்து பிளாக் செய்வது நல்லது. சீரான இடைவெளியில் உங்கள் கடவுச்சொற்களை மாற்றிக்கொண்டே இருங்கள். உங்கள் கணக்கு விவரங்களை அவ்வப்போது சரிபார்க்கவும்.
ஏதேனும் மோசடியான பரிவர்த்தனை நடந்தால், நீங்கள் உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் இரண்டு காரணி அங்கீகார பாதுகாப்பு (Two-Factor Authentication) அம்சத்தை தேர்வு செய்யலாம். இது உங்கள் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
கடவுச்சொற்களை ஹாக்கர்கள் கிராக் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
சமீபத்தில், Paytm நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா ஒரு ஹேக்கர் கடவுச்சொற்களை கிராக் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பற்றி பேசினார். மேலும் அவர் பாஸ்வேர்டுகளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
கேரளாவில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு: டிஜிபி தகவல்!
கடவுச்சொல்லின் நீளம் மிகவும் முக்கியமானது என்று திரு. சர்மா கூறினார். அவர் Xல் விரிவான விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.அதனுடன் இணைக்கப்பட்ட குறிப்பில், “கடவுச்சொல்லின் நீளம் மிகவும் முக்கியமானது. நம்பர்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர் மற்றும் எழுத்துக்களுடன் இணைத்து கடுமையான கடவுச்சொற்களை வைக்கும்போது அதை ஹேக் செய்வது கடினமானதாக மாறுகின்றது என்றார் அவர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D