ஒரே வீடியோ.. Followersஐ அள்ளப்போறோம்.. தப்பு கணக்கு போட்ட Insta-வாசிகள் - லபக்குனு தூக்கிய போலீஸ்! என்னாச்சு?

Ansgar R |  
Published : Oct 29, 2023, 05:26 PM IST
ஒரே வீடியோ.. Followersஐ அள்ளப்போறோம்.. தப்பு கணக்கு போட்ட Insta-வாசிகள் - லபக்குனு தூக்கிய போலீஸ்! என்னாச்சு?

சுருக்கம்

இப்போதெல்லாம் பிரபலமானவதற்கு என்னவேண்டுமானாலும் செய்யாமல் என்ற எண்ணம் வெகு சிலர் மத்தியில் எழுந்துள்ளது என்றால் அது மிகையல்ல. டிஜிட்டல் உலகம் முன்னேற்றத்தை நோக்கி நகரும் அதே நேரம் சில சிரமங்களும் அரங்கேறி வருகின்றது.

இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில் செயல்பட்ட, குறுகிராமை சேர்ந்த மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பெரிய அளவில் Followersஐ பெற விரும்பி சில ஆண்கள், போக்குவரத்துக்கு நிறைத்த சாலை ஒன்றில் கார் ஸ்டண்ட் ஒன்றில் ஈடுபட அது பெறிய அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. 

வைரலான அண்ட் வீடியோவில், குறுகிராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில், ஒரு சிவப்பு நிற கார் ரிவர்ஸ் கியரில் வேகமாக இயக்கப்படுவதும், அதன்பின் பின்னணியில் ஹரியான்வி பாடலுடன் மேலும் மூன்று கார்கள் வருவதும் தெரிகின்றது. அந்த வீடியோ வைரலானதை அடுத்து, அதிகமான Followersகள் வருவதற்கு முன்பாக போலீசார் அந்த நபர்களின் வீட்டை தட்டியுள்ளனர். 

தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபு: பிரதமர் மோடி நினைவு கூர்ந்த இரண்டு தமிழர்கள்!

அலேக்காக அந்த 3 நபர்களையும் தூக்கிய போலீசார், அந்த 3 கார்களையும் தூக்கிவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் ஸ்டண்ட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார் முழுமையாக ரீமாடலின் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெள்ளை நிறத்தில் வாங்கப்பட்ட அந்த கார் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

"கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அன்று குறுகிராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில், அந்த வாகனங்களில் இருந்தவர்கள் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டிச் சென்றதை பலர் கண்டுள்ளனர். அவர்கள் கார்களில் ஸ்டண்ட் செய்யும் போது ரீல் செய்து கொண்டிருந்தனர்" என்று உதவி போலீஸ் கமிஷனர் கபில் அஹ்லாவத் தெரிவித்தார்.

கேரளாவில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு: டிஜிபி தகவல்!

இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது உங்களுக்கு ஆபத்தானது மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் அறிவுரை கூறினார். குருகிராமில் இருந்து இதுபோன்ற விஷயங்கள் நடப்பது இது முதல் அல்ல. இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட்களுக்கு நகரச் சாலைகளே சாட்சி என்றே கூறலாம். குருகிராமில் சில வாரங்களுக்கு முன்பு வாகனங்களின் மேற்கூரையில் பட்டாசுகளை வைத்து வெடித்து வெளியான வீடியோ வைரலானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!