விநியோகச் சங்கிலி இயக்கத்தில் ஒத்துழைப்பு: ஜப்பான் ஜி7 கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்!

By Manikanda Prabu  |  First Published Oct 29, 2023, 3:00 PM IST

விநியோகச் சங்கிலிகளின் இயக்கத்தை எளிதாக்க ஒத்துழைக்குமாறு உலக நாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்


ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், விநியோகச் சங்கிலி மீள்திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துரைத்தார். இந்த பிரச்சினையில் பல ஆலோசனைகளை வழங்கினார். கொரோனா தொற்றுநோய் மற்றும் புவி-அரசியல் நிகழ்வுகள் தற்போதுள்ள விநியோகச் சங்கிலிகளின் பாதிப்புகள், பொருட்களின் விலைகள் மற்றும் உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதில் முன்னிலை வகித்தன.

Tap to resize

Latest Videos

பொது-தனியார் பங்களிப்பு, முக்கியமான உள்கட்டமைப்பில் முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலிகளின் புதுமை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தேவை ஆகியவற்றை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார். விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்துதல் மற்றும் பணியாளர்களின் திறன் மற்றும் மறுதிறன் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

விநியோகச் சங்கிலிகளின் இயக்கத்தை எளிதாக்குவதற்கும், எல்லை கடந்த  வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பில் ஒத்துழைக்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அரசுகளை வலியுறுத்தினார். ஜி20 டெல்லி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜி.வி.சி.களின் வரைபடத்திற்கான பொதுவான கட்டமைப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.

கேரளாவில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு: டிஜிபி தகவல்!

இந்த கூட்டத்திற்கு இடையே, ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிஷிமுரா யசுடோஷி, இங்கிலாந்தின் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான அமைச்சர்  கெமி படெனோச், ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டான் ஃபாரெல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய், ஜெர்மனியின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான அமைச்சர்  உடோ பிலிப் ஆகியோரை பியூஷ் கோயல் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்புகளின் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், வரி அல்லாத தடைகளை நீக்குதல், போன்ற முக்கிய பிரச்சினைகள்  விவாதிக்கப்பட்டன.

click me!