நடுங்க வைக்கும் கொலைகள்.. உலகின் இளம் சீரியல் கில்லராக மாறிய 8 வயது சிறுவன்.. யார் இந்த அமர்ஜீட் சதா?

By Ramya sFirst Published May 26, 2023, 1:05 PM IST
Highlights

1998-ம் ஆண்டு பீகாரில் உள்ள முசாஹஹர் கிராமத்தில் பிறந்த அமர்ஜீட் தனது முதல் கொலையை 2006 இல் செய்தார். 

2007 ஆம் ஆண்டு கைக்குழந்தையை கொன்றது தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, எட்டு வயது சிறுவன் அமர்ஜீத் சதா சிரித்துக் கொண்டிருந்தான். உலகின் இளம் சீரியல் கில்லர் என்று அறியப்படும் அமர்ஜீட், மூன்று கொலைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு பீகாரில் உள்ள முசாஹஹர் கிராமத்தில் பிறந்த அமர்ஜீட் தனது முதல் கொலையை 2006 இல் செய்தார். அப்போது அமர்ஜீட்-க்கு வெறும் 8 வயது மட்டுமே.

தனது உறவினரின் 6 வயது குழந்தையை அமர்ஜீட் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'காயங்களை ஏற்படுத்தி அதிலிருந்து மகிழ்ச்சியைப் பெற்ற சைக்கோ என்று அமீர்ஜீட்டை ஒரு உளவியல் நிபுணர் அழைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தெரு நாயை கொன்று, கயிற்றால் கட்டி, 100 மீட்டர் இழுத்துச் சென்ற கொடூர நபர்! அதிர்ச்சி சம்பவம்

பீகாரில் உள்ள பாகல்பூர் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி அமர்ஜீட்டிடம் விசாரணை நடத்தினார். முதலில், அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் பிஸ்கட் கேட்டார். அமர்ஜீட்டின் அலட்சியம் அதிகாரியை ஆத்திரப்படுத்தினாலும், எதிரே அமர்ந்திருந்தவர் வெறும் எட்டு வயது சிறுவன் என்பதை அவரால் மறக்க முடியவில்லை.

அமர்ஜீத்தின் பெற்றோர்கள் வறுமைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பீகாரில் கூலி வேலை செய்து வந்தனர். தனது சகோதரி பிறந்ததால் குடும்பம் நடத்துவது மிகவும் கடினமாக இருந்தது. அமர்ஜீட் இயல்பிலேயே தனிமையான நபர் என்றும், அவருக்கு நண்பர்கள் இல்லை, ஆனால் மரங்களில் ஏறி தனது கிராமத்தில் சுற்றித் திரிந்தார்.

எட்டு வயது சிறுவனின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது, நகரத்தில் வேலை கிடைத்ததும் அமர்ஜீட்டின் அத்தை தனது ஆறு வயது மகளுடன்அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நாள், இரண்டு குழந்தைகளையும் அமர்ஜீட் இடம் விட்டுவிட்டு, அத்தையும் அம்மாவும் காய்கறி வாங்க வீட்டை விட்டு வெளியேறினர்.

ஆரம்பத்தில் அமர்ஜீட் தனது அத்தை மகளை கிள்ளவும் அறையவும் தொடங்கினான். அவள் அழத் தொடங்கியபோது, அவன் தன் கைகளை அவள் தொண்டையை பிடித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இறுதியாக குழந்தை உயிரிழந்தது.

இதைதொடர்ந்து அருகில் உள்ள காட்டிற்குச் சென்று, குழந்தையின் தலையை கல்லால் அடித்து, குழந்தையை புதைத்துவிட்டு அமர்ஜீட் வீடு திரும்பினான். இருப்பினும், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும் அவரது பெற்றோர் அமர்ஜீட்-ஐ காப்பாற்றினர். ஆனால் அவரின் பெற்றோர் அமர்ஜீட்-ஐ காப்பாற்றாமல் இருந்திருந்தால், இன்னொரு உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

அமர்ஜீட்டின் அடுத்த இலக்காக, அவனது தங்கை மாறினாள், அவனுடைய பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தபோது, அமர்ஜீட்டின் கவனம் தன் சகோதரியின் பக்கம் திரும்பியது. அவன், அவளை கட்டிலில் இருந்து தூக்கி கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது தாயார் அவளுக்கு உணவளிக்க சென்ற போது தான் என்ன நடந்தது என்பது அவருக்கு தெரிந்தது.

அமர்ஜீத் அவரிடம் இதுபற்றி விசாரித்தபோது தனது குற்றத்தை அவர்ன் ஒப்புக்கொண்டார்ன்  "ஏன்?" என்று கேட்டபோது, "அப்படித்தான்" என்று அவன் சொன்னான். இந்த முறையும் அவனுடைய பெற்றோர் அவனைப் பற்றி போலீஸைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

2007 இல் அவரது இறுதி மற்றும் கடைசி கொலையின் போதுதான் அமர்ஜித் காவல்துறையிடம் சிக்கினார். இந்த முறை குஷ்பு என்ற ஆறு மாத பெண் குழந்தை. குழந்தையின் தாய் தனது மகளை ஆரம்பப் பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்தபோது அவளைக் காணவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமர்ஜித் அவளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். கழுத்தை நெரித்து கொன்று, செங்கலால் தாக்கி பின்னர் புதைத்ததாக அவர் ஒப்புக்கொண்டான். அவளை புதைத்த இடத்திற்கு கிராம மக்களை அழைத்துச் சென்றான்.

இறுதியாக காவல்துறையினரால் அழைக்கப்பட்டபோது அமர்ஜீத்துக்கு எட்டு வயது. அவர் செய்த காரியத்திற்குப் பிறகு அவர் முகத்தில் எந்த பயமும் இல்லாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவனது இயல்பான நடத்தையால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவர்கள் அவரை சமாதானப்படுத்த முடிந்ததும், அமர்ஜீட் காவல்துறையினரை தொடக்கப் பள்ளியின் பின்னால் உள்ள கல்லறைக்கு அழைத்துச் சென்றான், அங்கு தான் கடைசியாக கொலை செய்த குழந்தை அடக்கம் செய்த இடத்தை காட்டினான். பின்னர் அவர் தனது கடந்தகால கொலைகள் குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தான்.

கொலைகள் நடந்தபோது சிறுவனாக இருந்ததால் அவர் சிறார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்தியச் சட்டத்தின்படி 18 வயதை அடையும் வரை அவர் தங்கியிருந்தார்.  மற்றவர்களைக் காயப்படுத்துவதில் மகிழ்ச்சி அடையும் நடத்தையை அவர் கொண்டிருந்ததாக அமர்ஜீட்-க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது அமர்ஜீட் எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கார் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க : மெட்டாவின் சமீபத்திய பணிநீக்கம்.. இந்தியாவின் 2 முக்கிய நிர்வாகிகளும் வேலை இழந்ததால் அதிர்ச்சி..

click me!