கேரளாவில் உள்ள பாலக்காட்டில் டிராலி பேக்கில் கேரள ஓட்டல் உரிமையாளரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காட்டில் கேரள ஓட்டல் உரிமையாளரின் உடல் பாகங்கள் டிராலி பேக்கில் கண்டெடுக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மலப்புரத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்ட ஒருவர், அம்மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இறந்தவரின் உடல் உறுப்புகள் ஒரு தள்ளுவண்டிப் பையில் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் உறுப்புகள், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி காட் சாலையில் டிராலி பையில் கிடந்தன. சித்திக் என அடையாளம் காணப்பட்ட இறந்தவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை. இது தொடர்பாக அவரது மகன் புகார் அளித்தார்.
காணாமல் போன புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலப்புரம் எஸ்பி சுஜித் தாஸ், இந்த கொலை மே 18 மற்றும் 19 க்கு இடையில் நடந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தேகதிற்குரிய நபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவலில் வைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் இறந்தவரின் ஹோட்டலில் பணிபுரிபவர் என்றும், மற்றொரு சந்தேக நபர் அந்த ஊழியரின் நண்பர் என்றும் அடையாளம் காணப்பட்டார். குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டதாகவும், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சென்னையில் இருந்து கைது செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இறந்தவரின் பிரேதப் பரிசோதனை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படுகிறது என்றும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் கூறினார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க..Gold Rate Today : அடிச்சது ஜாக்பாட்.! நகை வாங்க சரியான நேரம் இது - எவ்வளவு தெரியுமா?