புதிய பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் கோரி ராகுல்காந்தி மனு.. பாஜக எதிர்ப்பது ஏன்?

By Ramya sFirst Published May 26, 2023, 10:47 AM IST
Highlights

சாதாரண பாஸ்போர்ட்வழங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது இராஜதந்திர பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இதை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் புதிய சாதாரண பாஸ்போர்ட்டை பெறுவதற்கு தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) கோரி ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கின் புகார்தாரரான பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்த மனுவை எதிர்த்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, சுப்பிரமணி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது..

இதையும் படிங்க : அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் ரெய்டு..! யார் இவர் தெரியுமா?

இதை தொடர்ந்து சுப்பிரமணியின் சுவாமியின் பதில் மனு டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராகுல்காந்தி 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான சரியான அல்லது கட்டாயமான காரணத்தை வழங்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 10 ஆண்டு பாஸ்போர்ட் வழங்குவதற்கு தேவையான தகுதி ராகுல் காந்திக்கு இல்லை என்றும் சுப்பிரமணியன் தனது மனுவில் சுட்டிக்காட்டினார். நீதியின் நலனுக்காக, ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா சான்றிதழ் ஒரு வருடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் உரிமை, மற்ற அடிப்படை உரிமைகளைப் போல, முழுமையானது அல்ல என்றும், தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் குற்றங்களைத் தடுப்பது போன்ற காரணங்களுக்காக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் சுப்பிரமனியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனது குடியுரிமை தொடர்பாக உள்துறை அமைச்சகம் (வெளிநாட்டு பிரிவு) வெளியிட்ட நோட்டீஸ்க்கு ராகுல் காந்தி பதிலளிக்கவில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

இதையும் படிங்க : காரணம் இல்லாமல் வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்ள மறுப்பது மனக் கொடுமைக்கு சமம்: உயர்நீதிமன்றம்

click me!