தெரு நாயை கயிற்றால் கட்டி 100 மீட்டர் இழுந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விலங்குவதை செய்யும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது. நபர் ஒருவர் இரக்கமின்றி தெரு நாயை கொன்று, அதை கயிற்றால் கட்டி வாய்க்காலில் அப்புறப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நௌபஸ்தா சந்தைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பப்பு என்ற நபர், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருடன் சேர்ந்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : குனோ தேசிய பூங்காவில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் இறப்பு! ஒரே வாரத்தில் 3வது முறை!
undefined
வைரலாகும் அந்த வீடியோவில், அந்த நபர் நாயின் உடலை சுமார் 100 மீட்டர் தூரம் சாலையில் ஒரு கயிற்றால் இழுத்துச் செல்வதைக் காணலாம். பப்புவின் ன் பின்னால் ஒரு முதியவரும் கையில் தடியுடன் நடந்து செல்வதைக் காணலாம். சமூக ஊடக தளங்களில் வேகமாகப் பரவி வரும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேற்கு மண்டல கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி) சிரஞ்சீவி நாத் சின்ஹா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : புதிய பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் கோரி ராகுல்காந்தி மனு.. பாஜக எதிர்ப்பது ஏன்?