திருப்பதிக்கே மொட்டையடித்த சேகர் ரெட்டி : காணிக்கை பணத்திலும் கை வைத்த கொடுமை

First Published Dec 26, 2016, 12:02 PM IST
Highlights


பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் கைகளில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் அதுவும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாகப் புழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று வருகிற வருமான வரித்துறை சோதனைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது,

இதில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும அவரது உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 171 ரூபாய் பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 38 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது பேரதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யப்பட்டனர்..

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரனையில் சேகர் ரெட்டிக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் புதிய நோட்டுக்களை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வடமாநிலங்ளைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே சேகர் ரெட்டி உறுப்பினர் பதவி வகித்த திருப்பதி தேவஸ்தான உண்டியலிலும் அவர் கை வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பதி உண்டியலில் செலுத்தப்படும்  பணத்தை எடுத்துக் கொண்டு அதற்குப் பதில் பழைய 500 1000 ஆயிரம் ரூபாய்களை போட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் பெருமளவில் உதவி செய்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பதி கோயில் ஊழியர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!