பள்ளி குழந்தைகளுக்கு மொபைல் போன்களை திருட பயிற்சி அளிக்கும் பள்ளிகள் உள்ளது என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராஜ்மஹால் மற்றும் தின்பஹார் நகரங்களில் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை திருட பயிற்சி அளிக்கும் பள்ளிகள் உள்ளது.
இங்கு பயிற்சி பெற்ற குழந்தைகள் பெரிய நகரங்களுக்கும், பெருநகரங்களுக்கும் அனுப்பப்படுகின்றனர். பின்னர், கொள்ளை கும்பல் தலைவர்கள் அவர்களுக்கு ஏற்ற பகுதிகளை ஒதுக்கி அவர்களின் வேலையை கண்காணிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொபைல் போன் திருடும் கும்பலைச் சேர்ந்த நான்கு குழந்தைகளை ராஞ்சி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 43 செல்போன்களையும் போலீசார் மீட்டனர்.2020 ஆம் ஆண்டிலும் மொபைல் திருடியதற்காக பிடிபட்டதாகவும், பின்னர் பீகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் நான்கு மாதங்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் கும்பலைச் சேர்ந்த 17 வயது நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
கும்பலைச் சேர்ந்த மற்றொருவர், 11 வயதே ஆனவர் என்று கூறப்படுகிறது. அவரும் கடந்த காலங்களில் மொபைல் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாகவும், பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 நாட்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது. திருட்டு போன்ற குற்றங்களுக்காக சிறார் இல்லங்களில் குழந்தைகள் குறுகிய காலத்திற்கு அடைக்கப்படுகின்றனர். போலீஸாரும் அவர்களைப் பற்றி அதிகம் விசாரிப்பதில்லை.
பிடிபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், தினமும் 8 முதல் 10 செல்போன்களை திருட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. திருடப்படும் ஒவ்வொரு மொபைலுக்கும் ஏற்ப ஊதியம் கொடுக்கப்படுகிறது. மொபைல் போனின் பிராண்ட் மற்றும் விலையைப் பொறுத்து, ஒரு கைபேசிக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை பெறுகிறார்கள். மொபைல் திருட்டில் ஈடுபடும் குழந்தைகள் பெற்றோரின் சம்மதத்துடன் அந்த வேலையை செய்கின்றனர்.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
பெரும்பாலான குழந்தைகள் மோசமான பொருளாதார நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தின் (ஜார்கண்ட்) டின்பஹார், தல்ஜாரி மற்றும் மகாராஜ்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டத்தின் பரன்பூர், ஹிராபூர், அசன்சோல் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தின்பஹார் மற்றும் ராஜ்மஹால் ஆகிய இடங்களில் மொபைல் திருடும் பயிற்சி பெற்றதாக பிடிபட்ட குழந்தைகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இவர்களது முதலாளி சூரஜ், சாந்தன் மற்றும் பலர் மொபைல் போன்களை திருடும் முறைகளை கற்றுக் கொடுத்தனர். பயிற்சி முடிந்து ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
காய்கறி மற்றும் தினசரி சந்தைகள் போன்றவை மொபைல்களை திருடுவதற்கு சிறந்த இடங்கள் என்றும், ஏனெனில் அவர்கள் பணியை முடித்துவிட்டு அங்கிருந்து காணாமல் போவது எளிதானது என்றும் விசாரணையில் கூறியுள்ளார்கள். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, திருடப்பட்ட மொபைல்கள் வங்கதேசம் மற்றும் நேபாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு வருடத்தில், ராஞ்சியில் மட்டும் இதுபோன்ற கும்பலைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்’ என்று கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..பொங்கல் மது விற்பனை 400 கோடி.! தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ராமதாஸ் வேதனை
இதையும் படிங்க..யார் செய்த சேட்டை.? கர்நாடக வளர்ப்பு மகனை கைது செய்ய வேண்டும்.! விமான விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் சவால்!