JEE மெயின் தேர்வு எப்போது? தேதிகளை வெளியிட்டது என்.டி.ஏ!!

Published : Jan 17, 2023, 05:34 PM IST
JEE மெயின் தேர்வு எப்போது? தேதிகளை வெளியிட்டது என்.டி.ஏ!!

சுருக்கம்

JEE மெயின் தேர்வு ஜன.24ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

JEE மெயின் தேர்வு ஜன.24ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் JEE தேர்வு JEE மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்று 2 கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிப்பு… தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு!!

பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜன.24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: இன்டிகோ விமானத்தின் அவசரக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்த சர்ச்சை: டிஜிசிஏ விசாரணை

4 அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள்  தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!