Tejasvi Surya:Indigo:இன்டிகோ விமானத்தின் அவசரக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்த சர்ச்சை: டிஜிசிஏ விசாரணை

By Pothy RajFirst Published Jan 17, 2023, 4:42 PM IST
Highlights

இன்டிகோ விமானத்தின் அவசரக் கதவை பயணி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்து சக பயணிகளை பீதியில் உறைய வைத்த விவகாரத்தில் விசாரணை நடத்த, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

இன்டிகோ விமானத்தின் அவசரக் கதவை பயணி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்து சக பயணிகளை பீதியில் உறைய வைத்த விவகாரத்தில் விசாரணை நடத்த, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இன்டிகோ நிறுவனத்தின் 6இ -7339 என்ற விமானம் புறப்பட்டது. அப்போது திடீரென விமானத்தில் பயணித்த பெங்களூரு மக்களவை எம்.பி. தேஜஸ்வி சூர்யா அவசரக் கதவை திறந்து சக பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்தினார்.

Varun Gandhi and Rahul Gandhi:வருணைச் சந்திப்பேன், கட்டிஅணைப்பேன் ஆனால்..! ராகுல் காந்தி வெளிப்படை

இதையடுத்து, ஓடு பாதையில் சென்ற விமானம் நிறுத்தப்பட்டு, கதவுகள் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து, விமானத்தின் காற்றழுத்தம் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு அதன்பின் புறப்பட்டது. இந்த விவகாரத்தில் அதுபோன்று நடந்து கொண்ட தேஜஸ்வி சூர்யாவிடம் விமான நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்புக் கோரி, அவரிடம் கடிதம் பெற்றுக்கொண்டபின்  விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் பெரிதாக பேசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து டிஜிசிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கடந்த 2022, டிசம்பர் 10ம் தேதி இன்டிகோ நிறுவனத்தின் சார்பில்6இ -7339 என்ற விமானம் சென்னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் அவசரக் கதவை பயணி ஒருவர் திறந்து, சக பயணிகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில்ஈடுபட்டுள்ளார். அதன்பின் விமானத்தின் அனைத்து  பரிசோதனைகளும் முடிந்தபின் 2 மணிநேரம் தாமதமாக விமானம் திருச்சிக்கு புறப்பட்டது. இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.  இது குறித்து விசாரிக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது”எனத் தெரிவித்தார்

அரபு அரசர் பெயரைக் கூறி டெல்லி 5ஸ்டார் ஹோட்டலில் ரூ.23 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப்பான இளைஞர்

ஏற்கெனவே சக பெண் பயணி ஒருவர் மீது மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர் குடிபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் மிஸ்ரா என்பவர் மீது டெல்லி போலீஸார் பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சங்கர் மிஸ்ராவை அவர் பணியாற்றிய அமெரிக்காவின் வெல்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது

click me!