ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிப்பு… தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு!!

By Narendran SFirst Published Jan 17, 2023, 4:36 PM IST
Highlights

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க அக்கட்சியின் தேசிய செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: யூடியூப் மூலம் சம்பாதித்து ஆடி கார் வாங்கிய இளைஞர்

இந்த கூட்டத்தின் முதல் நாளில், இந்த ஆண்டுக்கான ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று நட்டா கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் அனைத்துத் துறை முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளது என்றும் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் நம்பிக்கை தெரிவித்தார். 

இதையும் படிங்க: வருணைச் சந்திப்பேன், கட்டிஅணைப்பேன் ஆனால்..! ராகுல் காந்தி வெளிப்படை

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க அக்கட்சியின் தேசிய செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 2020 ஜனவரியில் பாஜக தேசியத் தலைவராக நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை ஜேபி நட்டா தலைவராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!