இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை: சாம்சங் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்

By Pothy RajFirst Published Sep 22, 2022, 4:06 PM IST
Highlights

இந்திய தேசத்தில் திறமைக்கு பஞ்சமில்லை, உலகம்முழுவதும் திறமையான, திறன்படைத்த இந்தியர்களுக்கு தேவை இருக்கிறது என்று சாம்சங் இந்தியா புத்தாக்க பயிற்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவி்த்தார்

இந்திய தேசத்தில் திறமைக்கு பஞ்சமில்லை, உலகம்முழுவதும் திறமையான, திறன்படைத்த இந்தியர்களுக்கு தேவை இருக்கிறது என்று சாம்சங் இந்தியா புத்தாக்க பயிற்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவி்த்தார்

சாம்சங் இந்தியா நிறுவனம் தன்னுடைய சிஎஸ்ஆர் திட்டத்தின் ஒருபகுதியாக, இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியது.

இதன்படி, இளைஞர்களுக்கு ஏஐ, ஐஓடி, பிக் டேட்டா, கோடிங் அன்ட் புரோகிராமிங் ஆகியவற்றில் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக முதல்கட்டமாக நாடுமுழுவதும் நலிவடைந்த 3 ஆயிரம் ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். 

பாஜக ரூ.307 கோடி செலவு ! 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வாரி இறைப்பு


இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில்,  சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கும், இந்திய மின்னனு திறன் கவுன்சில்(இஎஸ்எஸ்சிஐ) ஆகியவற்றுக்கு இடையே கையொப்பமானது.

காஜியாபாத்தில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல்: கார் மோதிய பின்பும் அடிதடி நீடிப்பு

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணைஅமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசியதாவது

 “ இந்திய தேசத்தில் திறமைக்கு பஞ்சமில்லை. இந்திய இளைஞரின் திறமைக்கும், திறனைக்கு உலகளவில் தேவை இருக்கிறது. 

திறன் என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத் திறன்களை அளிப்பதாக மட்டும் இருக்கக் கூடாது.  அவர்களின், வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவாயிலாகச் வளர்ச்சிக்கான கடவுச்சீட்டாக இருக்க வேண்டும்.

 வேலைவாய்ப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அது மாணவர்களுக்கும் இந்திய இளைஞர்களுக்கும் அதிக ஆர்வமாக இருப்பார்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் வாய்ப்புகள் சமமாக கிடைக்க வேண்டும் என்பது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்காகும்.

இதற்கான முயற்சிகள் முதன்மை கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, 2ம் நிலை மற்றும் 3ம் நிலை  2 நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களும் செய்ய வேண்டும்

என்ஐஏ ரெய்டு: பிஎப்ஐ அமைப்புக்கு தடை வருமா?: அமித் ஷா முக்கிய ஆலோசனை
இளைஞர்களின் திறனை மேம்பாடுத்த சாம்சங் நிறுவனம்,  இந்திய மின்னனு திறன் கவுன்சிலுடன் இணைந்து செயல்படுவது வரவேற்புக்குரியது. இந்தியாவுக்கும், இந்தியர்களுடனும் சிறந்த நட்புறவாக இருப்பதற்கு சிறந்த அடையாளமாகும். சாம்சங் நிறுவனத்தின் இந்த பயிற்சித் திட்டம் 2ம்நிலை, 3ம்நிலை நகரங்களில் உள்ள மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் 


இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்


இந்த பயிற்சியின்போது மாணவர்களுக்கு எல்இடி வகுப்புகள், ஆன்-லைன் பயிற்சிகள் ஆகியவை நாடுமுழுவதும் இந்திய மின்னனு திறன் கவுன்சில் ஒப்புதலுடன் வழங்கப்படும். ஏஐ பயிற்சி வகுப்பு 270 மணிநேரமும், 80 மணிநேரம் ப்ராஜெக்ட் வொர்க்கும் வங்கப்படும். பிக் டேட்டா வகுப்பு 160 மணிநேரம் நடக்கும், 80 மணி நேரம் ப்ராஜெக்ட் பணி இருக்கும். கோடிங் மற்றும் ப்ரோகிராமிங் வகுப்பு 80 மணிநேரம் நடக்கும். 
 

click me!